அ.தி.மு.க.வுக்குத் "தாவுகிறார் சோ

Subscribe to Oneindia Tamil

சென்னை:

Cho Ramaswamyவரவிருக்கும் தமிழக சட்டசபை தேர்தலில் ராஜ்ய சபா எம்.பி.யும் பிரபலபத்திரிக்கையாளருமான சோ ராமசாமி ஜெயலலிதாவை ஆதரிப்பார் என தெரிகிறது.

அவர் நடத்தி வரும் துக்ளக் பத்திரிக்கையின் 31-வது ஆண்டுவிழா திங்கள் கிழமைநடந்தது. இந்த விழாவில் சோ பேசும் போது, கருணாநிதி அரசு தமிகழகத்தில்தீவிரவாத்தை ஆதரித்து வருகிறது. ஊழல் என்பது மதவாத்தைவிட மோசமானது எனகூறினேன். வீரப்பன் விவகாரத்திற்கு பின் தீவிரவாதம் மிக மோசமானது எனகருதுகிறேன். கருணாநிதி அரசுதான் ஊழல் அரசிற்கு எடுத்துக்காட்டு.

விடுதலைப் புலிகளுடன் தொடர்புடைய சந்தன வீரப்பனுக்கு தி.மு.க. அரசுஆதரவளிக்கிறது என எதிர்கட்சிகள் அனைத்தும் குற்றம் சாட்டி வருகின்றன. ராஜ்குமார்கடத்தப்பட்டு விடுவிக்கப்பட்ட பின் வீரப்பன் தப்பிப்பதற்கு இந்த அரசு வழி செய்துகொடுத்தது.

Jayalalithaதமிழ் தீவிரவாதிகளுக்கு ஆதரவு தரும் ஒருவரை ராஜ்குமார் விடுதலைக்காக அனுப்பிவைத்தது இந்த அரசு என பேசினார்.

சோவின் இந்த கருத்து திராவிட முன்னேற்ற கழக தலைவரும், முதல்வருமானகருணாநிதி, நடிகர் ரஜினிகாந்த் என்றும் தனக்கு ஆதரவாக இருக்கிறார் என கூறியதைதொடர்ந்து தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

சமீபத்தில் தமிழ் நடிகர்களுக்கு விருது வழங்கும் விழா சென்னையில் நடந்தது.அப்போது ரஜினிகாந்திற்கும். முதல்வருக்கும் இருக்கும் நெருக்கம் கண்கூடாகதெரிந்தது.

சோவின் தி.மு.க. எதிர்ப்பு கருத்துகள் பிராமணர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்துபிராமணரான ஜெயலலிதாவை ஆதரிக்க வேண்டும் என கூறுவது போல்அமைந்திருந்தது.

Karunanidhi சோவின் பேச்சு ஜெயலலிதா விடுத்த பொங்கல் செய்தியை எதிரொலிப்பது போல்அமைந்திருக்கிறது. ஜெயலலிதா தனது பொங்கல் செய்தியில் தமிழ்நாட்டின் அமைதிதீவிரவாதிகளால் குலைக்கப்பட்டு விட்டது. இது நாட்டின் ஒற்றுமைக்கு பங்கம்விளைவிக்கக்கூடியது என கூறியிருந்தார். சோவின் பேச்சும் இதே போல் தான்அமைந்திருந்தது.

சென்ற வாரம் சோ ஜெயலலிதாவை இரண்டு முறை சந்தித்து பேசினார். அதன் பின்அவர் உள்துறை அமைச்சர் அத்வானியையும் சந்தித்து பேசினார். இது சோ பா.ஜ.க.,அ.தி.மு.க. இடையே முறிந்து போன உறவை மீண்டும் புதுப்பிக்க செய்யும்முயற்சியாக இருக்கலாம் என கருதப்பட்டது.

சென்னயிைல் தங்கியிருந்த பாரதீய ஜனதாவின் மூத்த தலைவர் ஜனா கிருஷ்ணமூர்த்திகூறுகையில் பா.ஜ.க., அ.தி.மு.க. விடம் எந்த விதமான விரோதமும் பாராட்ட வில்லைஎன கூறியதும் சந்தேகத்தை வலுப்படுத்துவதாக அமைந்துள்ளது.

சோவும், ஜெயலலிதாவும் நீண்ட கால நண்பர்கள். அவர்கள் சந்திப்புக்கு எந்தவிதமான காரணமும் கற்பிக்க முடியாது. வரவிருக்கும் தேர்தலில் அ.தி.மு.க.வுடன்கூட்டு சேர்வது குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவும் அவர்கூறியிருந்தார்.

ஜெயலலிதாவுடனான தனது சந்திப்பிற்கு எந்த விதமான அரசியல் பின்னணியும்கிடையாது என சோ தெரிவித்திருந்தார். தி.மு.க. அரசின் மேல் சோ சுமத்தியுள்ளகுற்றச்சாட்டுகள் தேசிய ஜனநாயக கூட்டணியை அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது.

அ.தி.மு.க.வை பொறுத்தவரை தேவையான சமயத்தில் தேவையான ஆதரவுகிடைத்திருக்கிறது என எடுத்துக் கொள்ளலாம்.

ஐ.ஏ.என்.எஸ்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+