தேதியில் குழப்பம் .. எப்போது சட்டசபைத் தேர்தல்?
டெல்லி:
தமிழ்நாடு, பாண்டிச்சேரி கேரளா, மேற்குவங்கம், அசாம் ஆகிய மாநிலங்களின்தேர்தல்களை ஏப்ரல் மாதம் நடத்த இப்போது தேர்தல் கமிஷன் முடிவு செய்துள்ளது.
தமிழ்நாடு, பாண்டிச்சேரி, கேரளா,மேற்கு வங்கம் மற்றும் அசாம் மாநிலசட்டசபைகளின் பதவிக் காலம் இந்த ஆண்டு முடிவடைகிறது. இதில் தமிழகசட்டசபையின் பதவிக் காலம் மே மாதம் 11-ம் தேதி முடிவடைகிறது. மற்ற மாநிலஅரசுகளின் பதவிக் காலம் ஜுன் மாதம் முடிவடைகின்றன.
மாநில அரசுகளின் பதவிக்காலம் முடிவதற்கு இரண்டு வாரங்கள் முன்பே தேர்தல்களைமுடிக்க வேண்டுமென்பது தேர்தல் கமிஷன் பின்பற்றி வரும் சம்பிரதாயம். இதன்படிதமிழகம் உள்ளிட்ட 5 மாநில தேர்தல்களை மே மாதம் நடத்தப்படும் எனஎதிர்பார்க்கப்பட்டது. அதுபோலவே தேர்தல் கமிஷனும் கூறி வந்தது.
மத்திய தேர்தல் கமிஷனர் கில் சென்ற மாதம் நிருபர்களை சந்தித்த போது 5மாநலங்களுக்கும் தேர்தல் ஒரே சமயத்தில் நடத்தப்படும். ஏனென்றால் ஒருமாநிலத்தின் தேர்தல் முடிவு அடுத்த மாநிலத்தில் பாதிப்பு ஏற்படுத்தக்கூடாது.
இதுபோல, முன்பும் கூட பல மாநிலங்களில் ஒரே சமயத்தில் தேர்தல்நடத்தப்பட்டுள்ளது. சட்டசபையின் பதவிக்காலம் முடியுமுன் தேர்தல் நடத்தப்படவேண்டும் என கூறினார்.
இந்நிலையில், பதவிக்காலம் முடியும் 5 மாநிலங்களிலும் ஏப்ரல் மாதத்தில் தேர்தலைநடத்தி முடிக்க தேர்தல் கமிஷன் முடிவெடுத்துள்ளது. இதை தேர்தல் கமிஷன்வட்டாரங்கள் உறுதி செய்கின்றன.
இந்த தேர்தலில் மின்னணு வாக்கு பதிவு எந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளன. இதன்காரணமாக தேர்தல் முடிவுகள் விரைவில் வெளியாகும். தேர்தல் ஆணையத்திடம் 1லட்சத்து 50 ஆயிரம் மின்னணு வாக்கு பதிவு எந்திரங்கள் இருக்கின்றன.
மேலும் 1 லட்சுத்து 50 ஆயிரம் மின்னணு வாக்கு பதிவு எந்திரங்களை தயாரிக்க ரூ 150கோடி செலவில் பெங்களூர் மற்றும் ஹைதராபாத்தில் இருக்கும் பொதுத் துறைநிறவனங்களிடம் தேர்தல் கமிஷன் ஆர்டர் செய்துள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications