ஹெராயின் கடத்தலில் முன்னாள் அமைச்சர் .. காங். புகார்
பாண்டிச்சேரி:
சென்னையில் முன்னாள் பாண்டிச்சேரி அமைச்சரின் உறவினர் உள்பட 2 பேரிடமிருந்துரூ. 2 கோடி மதிப்புள்ள ஹெராயின் போதைப் பொருள் கைப்பற்றப்பட்டது குறித்துசி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் என்று பாண்டிச்சேரி மாநில காங்கிரஸ் கட்சித்தலைவர் நாராயணசாமி கோரிக்கை விடுத்துள்ளார்.
அவரும், பொதுச் செயலாளர் காந்திராஜும் புதுவையில் செவ்வாய்க்கிழமைசெய்தியாளர்களிடம் பேசியதாவது:
கைது செய்யப்பட்டவர்களில் ஒருவரான சுதாகரன், முன்னாள் புதுவை அமைச்சர்சிவக்குமாரின் மைத்துனர். மற்றொருவர் திமுக உறுப்பினர். எனவே, கருணாநிதிஅரசிடமிருந்து பாரபட்சமற்ற விசாரணையை எதிர்பார்க்க முடியாது.
சிவக்குமாருக்கும் இந்த சம்பவத்திற்கும் தொடர்பு இருக்கலாம் என்று கருதுகிறோம்.எனவே அவரது பதவிக்காலத்தில் எத்தனை முறை வெளிநாடுகளுக்குப் போய்வந்தார், எங்கெல்லாம் போய் வந்தார் என்று விசாரிக்க வேண்டும்.
இந்த ஹெராயின் கும்பலுக்கும், விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கும் தொடர்புஉள்ளது. தங்களது போதைப் பொருள் கடத்தலுக்கு பாண்டிச்சேரியை அவர்கள்மையமாகக் கொண்டு செயல்பட்டு வருகின்றனர். இங்கிருந்து ஆந்திரா, ராமேஸ்வரம்வழியாக இலங்கைக்கு போதைப் பொருட்கள் கடத்தப்படுகின்றன.
1998-ம் ஆண்டே, சுதாகரன், போலி ரூபாய் நோட்டுக்கள் வழக்கில் கைதானவர்.ஆனால் அப்போது அமைச்சராக இருந்த சிவக்குமார் தலையீடு காரணமாக அவர் மீதுநடவடிக்கை எடுக்கப்படவில்லை.
இவர்கள் மீது பாரபட்சமற்ற வகையில் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.இந்த கும்பலுக்குப் பின்னணியில் உள்ள அரசியல்வாதிகள் மீதும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றார்கள்.
மறுக்கிறார் சிவக்குமார்:
இதற்கிடையே தனக்கும் ஹெராயின் வழக்கில் கைதாகியுள்ள சுதாகரனுக்கும் இடையேஎந்தத் தொடர்பும் இல்லை என்று முன்னாள் அமைச்சர் சிவக்குமார் கூறியுள்ளார்.
காங்கிரஸ் தலைவர்களின் புகார்கள் அப்பட்டமான பொய். அரசியல்உள்நோக்கத்துடன் கூடியது. ஹெராயின் கடத்தல் தொடர்பாக எந்த விசாரணைநடத்தப்பட்டாலும் அதை சந்திக்கத் தயார் என்றார் அவர்.
யு.என்.ஐ.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications