ஸ்ரீநகர்: தீவிரவாதிகள் தாக்குதல் - 11 பேர் பலி
ஸ்ரீநகர்:
ஜம்மு காஷ்மீர் மாநிலத் தலைநகர் ஸ்ரீநகரில் உள்ள விமான நிலையத்திற்குள் லஷ்கர் இ தொய்பா அமைப்பைச்சேர்ந்த 6 தீவிரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர். இதில் 4 தீவிரவாதிகள் உள்பட 11 பேர் இறந்தனர். 8சி.ஆர்.பி.எப். வீரர்கள் காயமுற்றனர்.
பிற்பகல் 3.40 மணியளவில் லஷ்கர் இ தொய்பா அமைப்பைச் சேர்ந்த தற்கொலைப் படை தீவிரவாதிகள் கும்பல்ஒன்று விமான நிலையத்திற்குள் கிரனேட் குண்டுகளை வீசியது. சரமாரியாகவும் அவர்கள் சுடத்துவங்கினர். பலத்தபாதுகாப்பில் இருக்கும் விமான நிலையம் மீது திடீரென தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதைப் பார்த்தபாதுகாப்புப் படை வீரர்கள், தீவிரவாதிகள் மீது பதில் தாக்குதல் நடத்தினர்.
இந்த மோதலின்போது, விமான நிலையத்தின் முதல் கேட் வழியாக தீவிரவாதிகள் விமான நிலையத்திற்கு உள்ளேநுழைய முயன்றனர். அவர்களைத் தடுத்து பாதுகாப்புப் படை வீரர்கள் சரமாரியாக சுட்டனர். இந்த மோதல் 50நிமிடங்கள் தொடர்ந்தது.
இந்த மோதலின்போது விமான நிலையத்திற்குள் இருந்த விமானங்களுக்கும், பயணிகளுக்கும் எந்தவிதமானபாதிப்பும் ஏற்படவில்லை.
போலீஸ் உடையில் வந்தனர்:
டெல்லியில் அரசுச் செய்தித்தொடர்பாளர் கூறுகையில், மோதலின்போது விமான நிலையத்திற்குள், இரண்டுபயணிகள் விமானங்கள் நின்று கொண்டிருந்தன. அவை இந்தியன் ஏர்லைன்ஸ் மற்றும் ஜெட் ஏர்வேஸ்நிறுவனங்களுக்குச் சொந்தமானவை.
போலீஸ் உடையில் லஷ்கர் இ தொய்பா தீவிரவாதிகள் விமான நிலையத்திற்குள் நுழைய முயன்றனர். மாருதிகாரில் அவர்கள் வந்திருந்தனர். முதலில் கிரனேட் வெடிகுண்டுகளை அவர்கள் வீசினர். பின்னர் சுடத் துவங்கினர்.இதைத் தொடர்ந்து விமான நிலையத்தைச் சுற்றிலும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த சி.ஆர்.பி.எப். வீரர்கள்தீவீரவாதிகளின் முயற்சியைத் தடுத்து பதில் தாக்குதலில் ஈடுபட்டனர்.
இந்த மோதலில் எட்டு வீரர்கள் காயமடைந்தனர். தீவிரவாதிகள் தரப்பில் 4 பேர் கொல்லப்பட்டனர்.பொதுமக்களில் 2 பேரும், மூன்று பாதுகாப்புப் படை வீரர்களும் இறந்தனர். 2 தீவிரவாதிகள் தப்பி விட்டனர்.காயமடைந்தவர்களில் நான்கு பேர் பெண் காவலர்கள். அனைவரும் விமானப்படை மற்றும் போலீஸ் தலைமையகமருத்துவமனைகளுக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.
சம்பவத்திற்குப் பின் தாக்குதலுக்குத் தாங்கள்தான் காரணம் என லஷ்கர் இ தொய்பா தீவிரவாதிகள் போனில்தகவல் தெரிவித்தனர். தாக்குதலில் அபு அப்துல்லா தாரிக், அபு ஹம்ஸா, அபு ஒசாமா, அபு குபாப், அபு அப்துல்லாசயார், அபு அப்துல்லா ஆகியோர் பங்கெடுத்ததாகவும் அந்த அனாமதேய போன் தகவல் தெரிவித்தது.
தொடரும் தாக்குதல்கள்:
கடந்த மாதம் டெல்லி செங்கோட்டை வளாகத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த ராணுவ வீரர்களை,ராணுவ உடையில் வந்த லஷ்கர் இ தொய்பா தீவிரவாதிகள் சுட்டுக் கொன்றனர்.
அதைத் தொடர்ந்து சில நாட்களுக்கு முன்பு ஜம்மு காஷ்மீர் முதல்வர் பரூக் அப்துல்லா கலந்து கொண்டநிகழ்ச்சியில் இதே அமைப்பைச் சேர்ந்த தீவிரவாதிகள், குண்டு வீசினர். இதில் பரூக் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார்.
தற்போது பலத்த பாதுகாப்புக்கிடையே உள்ள விமான நிலையத்தை தீவிரவாதிகள் தாக்கியுள்ளது பரபரப்பைஏற்படுத்தியுள்ளது.
யு.என்.ஐ.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications