வெடிகுண்டுகளுடன் பாக். தீவிரவாதி கைது
டெல்லி:
டெல்லியை வெடிகுண்டு வைத்துத் தகர்க்கத் திட்டமிட்டிருந்தது தொடர்பாக பாகிஸ்தானைச் சேர்ந்த அல் பதார் தீவிரவாத அமைப்பைச் சேர்ந்ததீவிரவாதியை டெல்லி போலீஸார் கைது செய்தனர்.
இதுகுறித்து டெல்லி போலீஸார் கூறியதாவது:
டெல்லியில் முக்கியமான இடங்களைத் தகர்க்கத் திட்டமிட்டிருந்த பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாதியை கைது செய்துள்ளோம். அவர் பெயர் மசூத் உல் ஹக்.இவர் டெல்லியின் வடமேற்கில் உள்ள தொழிற்சாலை ஒன்றில் வெல்டராகப் பணிபுரிந்து வந்தார்.
செவ்வாய்க்கிழமை இரவு இவர் அங்குள்ள பஸ் நிலையம் அருகே நின்று கொண்டிருந்த போது கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட அவரிடமிருந்துஆர்.டி.எக்ஸ்.வெடி பொருட்கள், டெட்டனேட்டர், மின்சார வயர்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. இவர் மேல் வெடிபொருட்கள் தடைச் சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இவரிடம் விசாரணை நடத்திய போது மசூத் உல் ஹக் போலீஸாரிடம் கூறிய வாக்குமூலத்தில், பாகிஸ்தானில் உள்ள மன்சேரா அருகேயுள்ள உகாய்யில் அல்பதார் தீவிரவாத அமைப்பு எனக்கு பயிற்சி அளித்தது. மேலும் எப்படி வெடிமருந்துப் பொருட்களை உபயோகப்படுத்துவது, ஏ.கே.47 துப்பாக்கிகளைப்பயன்படுத்தும் முறை, கமாண்டோ தாக்குதல், ராக்கெட் மூலம் தாக்குதல் நடத்துதல் ஆகியவை குறித்து பயிற்சியளித்தார்கள்.
1999 ம் ஆண்டு செப்டம்பர் மாதம் அல்பதார் தீவிரவாத அமைப்பு கமாண்டர் இர்பான் ஜம்மு காஷ்மீரில் உள்ள அக்னோர் மூலம் இந்தியாவுக்குள்நுழைய உதவி செய்தார். மேலும் சில ஆயுதங்கள் வாங்குவதற்காக ரூ 25, 000 கொடுத்தார் என்றார்.
முன்னதாகப் போலீஸார் கூறுகையில், டெல்லியில் அவர் ஜூம்மா மசூதி அருகேயுள்ள ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்தார். அங்கு தங்கிக் கொண்டு ஜம்முகாஷ்மீர், அஜ்மீர், ஆக்ரா, மும்பை ஆகிய பகுதிகளைச் சுற்றிப்பார்த்தார். ஹக் டெல்லிக்கு வருமுன் கிஸ்துவார் என்ற பகுதியில், ரியாஸ் என்பவருடன் வசித்துவந்தார்.
ஹக் கைது செய்யப்பட்டது குறித்து ஜம்மு காஷ்மீர் போலீஸாருக்குத் தகவல்கள் கொடுக்கப்பட்டுள்ளது. அவருடன் அவரது கூட்டாளிகள் யாராவதுஇந்தியாவுக்குள் ஊடுருவியிருக்கிறார்களா என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறோம் என்றனர்.
ஐ.ஏ.என்.எஸ்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications