ரூ. 1000 கோடியில் கிராம வளர்ச்சித் திட்டம்
கோவை:
ரூ. 1000 கோடி மதிப்பில், அடிப்படை வசதிகள் இல்லாத கிராமங்களில், அந்த வசதியை ஏற்படுத்த சேவா என்ற சமூக சேவை நிறுவனம்திட்டமிட்டுள்ளது.
கோவை மாவட்டம் ஆனக்கட்டி சுவாமி தயானந்த ஆசிரமத்தில் சேவா சமூக சேவை நிறுவனச் சேர்மன் வெங்கட்ராமன் நிருபர்களிடம் கூறுகையில்,கிராமங்களில் அடிப்படை வசதிகளைச் செய்து கொடுப்பதை சேவா சமூக சேவை நிறுவனம் தனது குறிக்கோளாகக் கொண்டுள்ளது.
ஒவ்வொரு கிராமத்துக்கும் ஒரு லட்ச ரூபாய் ஒதுக்கப்படும். இந்தப் பணத்தை வைத்து அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்படும். சேவா செயற்குழுக்கூட்டத்தில் இதுகுறித்து முடிவு எடுக்கப்பட்டது.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் சேவா, அமைப்பு டெல்லியில் துவக்கப்பட்டது. இதில் பல்வேறு இந்து மடாதிபதிகள் இடம் பெற்றுள்ளனர். கிராமப்புறமக்களுக்கு சேவை செய்வ, சேவா அமைப்பு தனது குறிக்கோளாகக் கொண்டுள்ளது.
சேவா என்ற சமூக சேவை அமைப்பு ஒவ்வொரு மாநிலத்திலும் 20 கிராமங்களைத் தேர்ந்தெடுத்து நலத்திட்டங்களை செயல்டுத்துவது எனவும்தீர்மானித்துள்ளது.
இதற்காக ரூ 1000 கோடி செலவிடுவது என சேவா திட்டமிட்டுள்ளது. இதற்காக வெளிநாடு வாழ் இந்தியர்களிடம் பணம் வசூலிக்கத் தொடங்கிவிட்டோம்.
கோவை, தயானந்த சரஸ்வதி ஆசிரமத்தில், ஜனவரி 30 ம் தேதி முதல் இரண்டு நாட்கள் கருத்தரங்கு நடத்தத் திட்டமிட்டுள்ளோம். இந்தியாவில் எந்தெந்தகிராமங்களில் அடிப்படை வசதிகளைச் செய்வது, எப்படிச் செயல்படுத்துவது என்பது குறித்து அப்போது விவாதிக்கப்படும் என்றார்.
யு.என்.ஐ.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications