பதவியிழப்பாரா சிங்கப்பூர் தமிழ் எம்.பி.?

Subscribe to Oneindia Tamil

சிங்கப்பூர்:

சிங்கப்பூர் முக்கிய எதிர்க்கட்சியின் தலைவர் ஜே.பி.ஜெயரத்தினம், அவமதிப்பு வழக்கு ஒன்றில் கட்ட வேண்டியபணத்தை சரியாக கட்டாததால், தனது எம்.பி. பதவியை இழக்கும் அபாயத்தில் உள்ளார்.

முக்கிய எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சியின் தலைவர் ஜெயரத்தினம். இவர் மீது 1995-ம் ஆண்டுதொடரப்பட்ட அவமதிப்பு வழக்கு ஒன்றில் அபராதம் விதிக்கப்பட்டது. தவணை முறையில், பணத்தைக் கட்டஉத்தரவிடப்பட்டது. இதுவரை இரண்டு முறை பணம் கட்டி விட்டார். மூன்றாவது தவணை பணத்தை ஒரு நாள்தாமதமாக ஜெயரத்தினம் கட்டினார்.

ஜெயரத்தினம் தனது மூன்றாவது தவணைப் பணமான 1,31,200 அமெரிக்க டாலர்கள் பணத்தைசெவ்வாய்க்கிழமையே கட்டியிருக்க வேண்டும். ஆனால் புதன்கிழமைதான் பணத்தைக் கட்ட ஜெயரத்தினம்முயற்சித்தார்.

ஆனால் மனுதாரர்கள் அதை ஏற்றுக் கொள்ளவில்லை. அனைவரும் சேர்ந்து ஜெயரத்தினம் மீது கோர்ட்டில் திவால்வழக்குத் தொடர்ந்துள்ளனர். இந்த வழக்கில், ஜெயரத்தினத்திற்கு எதிராக தீர்ப்பு வழங்கப்பட்டால், அவர் தனதுஎம்.பி. பதவியை இழக்க நேரிடும்.

ஜெயரத்தினம் மீது ஆளும் மக்கள் கட்சியைச் சேர்ந்த சில எம்.பிக்கள் உள்பட 8 பேர் வழக்குத் தொடர்ந்துள்ளனர்.கடந்த ஆண்டும் இதேபோன்ற திவால் வழக்கை கடந்த ஆண்டு மே மாதமும் ஜெயரத்தினம் சந்தித்தார்.இருப்பினும் தப்பித்து விட்டார். இப்போதைய வழக்கு குறித்து ஜெயரத்தினம் கவலைப்படவில்லை.

கடந்த முறை செய்தது போலவே, இந்த முறையும் தீர்ப்பு பாதகமாக வந்தால் அப்பீல் செய்வேன். அந்த அப்பீல்மீது தீர்ப்பு வழங்கப்படும் வரை என்னை எம்.பி. பதவியிலிருந்து சபாநாயகரால் நீக்க முடியாது. நான் எம்.பி.பதவியை இழக்க மாட்டேன் என்கிறார் ஜெயரத்தினம்.

எம்.பி பதவியை இழந்தால், முதல் முறையாக எம்.பி பதவி பறிக்கப்படும் எதிர்க்கட்சி தலைவராக ஜெயரத்தினம்இருப்பார். 1981-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று, ஆளுங்கட்சிக்குப் பெரும் அதிர்ச்சியைக்கொடுத்தவர் ஜெயரத்தினம். ஆளுங்கட்சியே தொடர்ந்து வெற்றி பெற்று வந்த நிலையில், அதை தகர்த்த முதல்எதிர்க்கட்சித் தலைவர் ஜெயரத்தினம் என்பது குறிப்பிடத்தக்கது.

அவருக்கும், பிரதமர் லீ குவான் யூவுக்கும் இடையே, நாடாளுமன்ற விவாதத்தின்போது நடந்த கடுமையானவாக்குவாதம் சிங்கப்பூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதுவரை, அவமதிப்பு வழக்கில் ஆயிரக்கணக்கான டாலர்கள் அளவுக்கு ஜெயரத்தினம் கட்டியுளளார். பலமுறைதிவால் வழக்குகள் அவர் மீது தொடரப்பட்டு, அத்தனையும் தோல்வியடைந்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+