மீண்டும் ஓடுமா இந்தியா-பாக். பயணிகள் ரயில்?
டெல்லி:
இந்தியா பாகிஸ்தானுக்கிடையே பிப்ரவரி மாதம் 7 ம் தேதியுடன் ரயில்வே ஒப்பந்தம் முடிவடைவதையடுத்து அதற்குப் பிறகு, இரு நாடுகளுக்கிடையிலானபயணிகள் ரயில் போக்குவரத்தை மட்டும் நீட்டிப்பது என இந்தியா, பாகிஸ்தான் ரயில்வே உயர்மட்டக் குழு புதன்கிழமை தீர்மானித்தது.
ஆனால் இந்தியா, பாகிஸ்தான் ரயில்வே உயர் மட்டக் குழு அதிகாரிகள் ஆலோசனை முடிவடைந்தபின் இதுகுறித்து இறுதி முடிவு எடுப்பது எனவும்அவர்கள் முடிவு செய்துள்ளனர்.
1976 ல் இந்தியாவில் அமிர்தசரஸ் நகருக்கும், பாகிஸ்தானில் லாகூரக் நகருக்கும் இடையே பயணிகள் ரயில் விடுவது தொடர்பாக ஒப்பந்தம்கையெழுத்தானது. இதையடுத்து இந்தியாவில் அத்தாரி நகருக்கும், பாகிஸ்தானில் உள்ள வாகா பகுதிக்கும் சம்ஜதா எக்ஸ்பிரஸை வாரம் இருமுறைவிடுவது என இரு நாட்டு ரயில்வே உயர் அதிகாரிகள் முடிவெடுத்தனர்.
இந்த ரயில், அமிர்தசரஸ் இயக்கப்பட வேண்டும் என்று பாகிஸ்தான் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. ஆனால் பாதுகாப்பு காரணங்களால் இதை இந்தியாஒப்புக் கொள்ளவில்லை.
இதுகுறித்து, இந்திய பாதுகாப்பு அதிகாரிகள் கருத்து தெரிவிக்கையில், சம்ஜதா எக்ஸ்பிரஸ் ரயிலை பாகிஸ்தானியர்கள் ஆயுதங்கள், கள்ளநோட்டுக்கள்வெடிமருந்துகள் ஆகியவற்றைக் கடத்துவதற்காகப் பயன்படுத்துகிறார்கள். இருப்பினும் இந்தியா மற்றும் பாகிஸ்தானில் உள்ள மக்களுக்குப்பயன்படும் வகையில் இந்த சம்ஜதா எக்ஸ்பிரஸ் ரயில் சேவை தொடர்ந்து வருகிறது என்றனர்.
பாகிஸ்தான் ரயில்வே கூடுதல் பொது மேலாளர் அப்துல் கயாம் கூறுகையில், இரு நாட்டு உயர்மட்டக் குழுவினரும் சந்தித்துப் பேசுவது ரயில்போக்குவரத்துக்குக் கூடுதல் பயனளிக்கும் என்றார். இவர் பாகிஸ்தான் சார்பில் வந்துள்ள உயர்மட்டக் குழுவின் தலைவர் ஆவார்.
இந்தியா - பாகிஸ்தான் ரயில் சேவை 1990 ல் பல பிரச்சனைகளைச் சந்தித்தது. பின்னர் 1994 ம் ஆண்டு புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகி அது 1997 ல்புதுப்பிக்கப்பட்டது. தற்போது உள்ள ஒப்பந்தம் 2000 மாவது ஆவது ஆண்டு ஜூலை 7 ம் தேதியுடன் முடிவடைகிறது. பின்னர் மீண்டும், இந்த ஒப்பந்தம்2001 ம் ஆண்டு பிப்ரவரி 7 ம் தேதி வரை புதுப்பிக்கப்பட்டது.
தற்போது, பிப்ரவரி 7 ம் தேதிக்குப் பின் ரயில் போக்குவரத்தை நீட்டிப்பது குறித்து இரு நாட்டு ரயில்வே உயர்மட்ட அதிகாரிகளும் விவாதித்துமுடிவெடுப்பார்கள்.
ஐ.ஏ.என்.எஸ்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications