பெண்ணின் வயிற்றில் தலைமுடிப் பந்து
மதுரை:
தலைை முடியை தின்றதால் ஒரு பெண்ணின் வயிற்றில் பெரிய பந்து போல் தலைமுடிசேர்ந்திருந்தது. இதை மதுரை டாக்டர்கள் அறுவைச் சிகிச்சை மூலம் அகற்றினர்.
மதுரை திருப்பரங்குன்றத்தில் வசித்து வந்த 20 வயது பெண்ணுக்கு வெகு நாட்களாகவயிற்றுவலி, பசியின்மை, வாந்தி போன்ற தொந்தரவுகள் இருந்து வந்தது.
இது தொடர்பாக பல தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்ற பின்பும்குணமாகாத காரணத்தால் அவர் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறசென்றார். அவரது இரைப்பையில் பெரிய கட்டி இருப்பதை மருத்துவர்கள் எக்ஸ் - ரேமூலமும் ஸ்கேன் மூலமும் கண்டுபிடித்தனர். இதையடுத்து அறுவை சிகிச்சை செய்துகட்டியை அகற்றுவது என மருத்துவர்கள் முடிவு செய்தனர்.
அறுவை செய்த மருத்துவர்கள் அந்த பெண்ணின் வயிற்றில் கால்பந்து அளவில் பெரியமுடி கொத்தாக இருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து அந்த பெண்ணுக்குஅறுவை சிகிச்சை செய்த மருத்துவர்கள் கூறியதாவது:
இந்த பெண் 10 ஆண்டு காலமாக எவருக்கும் தெரியாமல் தனது தலை முடியை பிய்த்துதின்று வந்திருக்கிறார். இந்த தலைமுடிகள் வயிற்றில் ஜீரணமாகாமல் பந்து போல்உருண்டு இரைப்பையின் உருவத்திற்கு மாறிவிட்டது.
வயிற்றில் இடமில்லாத காரணத்தால் அவரால் சாப்பிட முடியவில்லை, சிறிதளவுசாப்பிட்டாலும் வயிறு நிறைந்தது போல் தோன்றும். இந்த நிலை தொடர்ந்திருந்தால்தலைமுடி பந்து பெரிதாகி இரைப்பை கிழிந்திருக்கும், அவர் ரத்த வாந்தி எடுத்துஇறக்கும் நிலையும் உருவாகி இருக்கும். அந்த பெண் தற்போது குணமாகி வருகிறார்என கூறினர்.












Click it and Unblock the Notifications