"கிரிக்கெட் வாரியத்தை அவமானப்படுத்தி விட்டார் பிந்த்ரா
டெல்லி:
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) ஒழுங்கு நடவடிக்கைக் குழு,பஞ்சாப் கிரிக்கெட் சங்கத்தின் தலைவர் பிந்த்ரா கிரிக்கெட் வாரியத்தைஅவமானப்படுத்தும் விதமாக கருத்துத் தெரிவித்துள்ளதாகக் கூறியுள்ளனர்.
இந்திய கிரிக்கெட் வாரியத்தின் செயல்பாடுகள் குறித்தும், மேட்ச் பிக்ஸிங் தொடர்பாகவாரியத்தைக் குறை கூறியும் பிந்த்ரா கருத்துத் தெரிவித்திருந்தார். இதையடுத்து அவர் மீதுநடவடிக்கை எடுப்பதற்காக வாரியத்தின் ஒழுங்கு நடவடிக்கைக் குழு கூடியது.
திங்கள் கிழமை கூடிய வாரியக் கூட்டத்தில், ஒழுங்கு நடவடிக்கைக் குழுகண்டுபிடிப்புகளை அடுத்த மாதம் 23-ம் தேதி சென்னையில் நடைபெற இருக்கும்பொதுக்குழு கூட்டத்தின் போது சமர்ப்பிப்பது என முடிவு எடுத்தது.
பொதுக்குழு பிந்த்ராவின் மீதும், பஞ்சாப் கிரிக்கெட் சங்கத்தின் மீதும் நடவடிக்கைஎடுப்பதற்கு முன் கிரிக்கெட் வாரியத்தின் கண்டுபிடிப்புகள் குறித்து ஆராயும். நடவடிக்கைஎடுப்பதற்கு பொதுக்குழுவுக்கு அதிகாரம் உண்டு.
கிரிக்கெட் கட்டுபாட்டு வாரியத்தின் உயர் அதிகாரி ஒருவர் நிருபர்களிடம் கூறுகையில்,வாரியத்தலைவர் ஏ.சி. முத்தையா தலைமையில் நார்ஹாரி அமின் மற்றும் ராம் பிரசாத்ஆகியோர் கொண்ட 3 பேர் குழு பிந்த்ரா மீது எடுக்க வேண்டிய நடவடிக்கை குறித்து முடிவுசெய்யும்.
பிந்த்ராவின் கருத்துக்கள் கிரிக்கெட் கட்டுபாட்டு வாரியத்தையும், கிரிக்கெட்டையும் இழிவுபடுத்தியுள்ளது என்றார்.
திங்கள்கிழமை நடந்த கூட்த்தில் பிந்த்ரா பங்கேற்கவில்லை. பஞ்சாப் கிரிக்கெட் சங்கம்சார்பில் மொகீந்தர் பான்டாவ் பங்கேற்றார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications