வருகிறது நெட்வொர்க் அகாடமிகள்
திருச்சி:
இந்தியாவில் அனைத்து மாநிலங்களிலும், யூனியன் பிரதேசங்களிலும் 34 நெட்வொர்க் நிறுவனங்கள் அமைப்பதற்காக மத்திய அரசுடன் ஒப்பந்தம்கையெழுத்தாகியுள்ளதாக பெங்களூரை அடிப்படையாகக் கொண்டு செயல்பட்டு வரும் சிஸ்கோ சிஸ்டம் இந்தியா லிமிடெட் பொதுமேலாளர் டி.எஸ்.சீனிவாசன்புதன்கிழமை தெரிவித்தார்.
நெட்வொர்க் அகாடமிகள் அமைப்பதற்கு ரூ 8.6 மில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
திருச்சி மண்டல பொறியியல் கல்லூரி சார்பில், நெட்வொர்க்கிங் மற்றும் தகவல்தொழில்நுட்பம் என்ற தலைப்பில் நடக்கும் தேசிய அளவிலான இரண்டுநாட்கள் கருத்தரங்கை தொடங்கி வைத்து அவர் பேசுகையில், நெட்வொர்க்கிங் தொடர்பான அகாடமிகள் அமைத்தால் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டமாணவர்கள் பயனடைவார்கள் என்றார்.
கல்லூரி முதல்வர் சுப்ரமணியம் பேசுகையில், கல்லூரியின் மென்பொருள் துறை மற்றும் தகவல் தொழில் நுட்பம் தொடர்பான முன்னேற்றங்களுக்காகஉலக வங்கி உதவியுடன் ஈ - காமர்ஸ் மையம் அமைக்கத் திட்டமிட்டுள்ளோம் என்றார்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications