"தலித் மாணவர்களைத் தாக்குவதா?

Subscribe to Oneindia Tamil

மதுரை:

மதுரையில் செவ்வாய்க்கிழமை கடன் வசதி கேட்டு போராட்டம் நடத்திய எஸ்சி, எஸ்.டி மாணவர்கள் மீது போலீஸார் தடியடி நடத்திய சம்பவத்துக்குப் புதியதமிழகம் கட்சியினரும், பாட்டாளி மக்கள் கட்சியினரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்துப் புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி புதன்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கை:

உயர் கல்விக்காக கடன் வசதி செய்துதரக்கோரி எஸ்.சி., எஸ்.டி., மாணவர்கள் செவ்வாய்க்கிழமை மதுரை ரயில்வே நிலையத்திலிருந்து, கலெக்டர்அலுவலகம் வரை ஊர்வலம் நடத்தினர்.

இவர்கள் அனுமதி பெறாத பாதை வழியாகச் செல்கின்றனர் என்று காரணம் காட்டி போலீஸார் இவர்கள் மீது தடியடி நடத்தினர். இந்தச் சம்பவத்தைப்புதிய தமிழகம் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது.

மாநில அரசு, அவர்களுக்குக் கல்விக் கடன் அளிக்கத் தவறினால் பிப்ரவரி 15 ம் தேதி புதிய தமிழகம் கட்சி மதுரை கலெக்டர் அலுவலகம் முன்புபோராட்டத்தில் ஈடுபடும்.

எஸ்.சி., எஸ்.டி., வகுப்பைச் சேர்ந்த மாணவர்கள் விடுதிகளுக்கு கட்ட பணம் இல்லாமல் தவிக்கின்றனர். மாநில அரசு, இவர்களின் பிரச்சனைகளைஉடனடியாகத் தீர்த்து வைக்க வேண்டும் என்று தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக, மதுரை விருந்தினர் இல்லத்தில் 100 க்கும் மேற்பட்ட எஸ்.சி., எஸ்.டி., மாணவர்கள் டாக்டர் கிருஷ்ணசாமியைச் சந்தித்துத் தங்கள் குறைகள்குறித்துக் கூறினார்கள்.

பா.ம.க.வும் கண்டனம்:

மாணவர்கள் மேல் போலீஸார் தடியடி நடத்தியதைக் கண்டித்து, பாட்டாளி மக்கள் கட்சியும் கண்டனம் விடுத்துள்ளது. இதுகுறித்துப் பாட்டாளி மக்கள் கட்சிதுணை பொதுச் செயலாளர் முருகவேல் ராஜன் வெளியிட்டுள்ள அறிக்கை:

போலீஸார் தடியடி நடத்தியதில் காயமடைந்த மாணவர்கள் ராஜாஜி மருத்துவமனையில் சேர முயன்றபோது, அவர்களை மருத்துவமனையில் சேர விடாமல்போலீஸார் தடுத்து நிறுத்தினர். மருத்துவமனை நோக்கிச் சென்ற மாணவர்களையும் போலீஸார் விரட்டியடித்துள்ளனர்.

ஊர்வலம் நடத்திய மாணவர்கள் மீது தடியடி நடத்திய போலீஸார் மீது தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தனது அறிக்கையில்குறிப்பிட்டுள்ளார்.

யு.என்.ஐ.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+