யாழ்ப்பாணத்தின் சில பகுதிகள் மீட்பு ..ராணுவம்
கொழும்பு:
யாழ்ப்பாணத்தில் ராணுவம் நள்ளிரவில் தாக்குதல் நடத்தி புலிகளிடமிருந்த முக்கியப்பகுதியை தன் வசப்படுத்திவிட்டதாக ராணுவம் செவ்வாய்க்கிழமை அறிவித்தது.
இலங்கையில் தனி ஈழம் கேட்டுப் போராடி வரும் விடுதலைப்புலிகளுக்கும், ராணுவ வீரர்களுக்கும் இடையேகடந்த 17 ஆண்டுகளாகத் தொடர்ந்து தாக்குதல் நடந்து வருகிறது.
கடந்த நவம்பர் மாதம் யாழ்ப்பாணம் பகுதியில் ராணுவம் வசம் இருந்த பல பகுதிகளை விடுதலைப்புலிகள்கைப்பற்றினார்கள். அந்தப் பகுதிகளை மீட்க இலங்கை ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது. செவ்வாய்க்கிழமைநள்ளிரவில் முகமலை என்ற இடத்தில் விடுதலைப்புலிகள் மீது ராணுவ வீரர்கள் தாக்குதல் நடத்தினார்கள்.
அப்போது 8 சதுர கிலோ மீட்டர் இடத்தைக் கைப்பற்றி விட்டதாக ராணுவம் தெரிவித்துள்ளது. இதேபோல் பல்லாய்என்ற இடத்துக்குச் செல்லும் முக்கிய நெடுஞ்சாலையில் இரண்டரைக் கிலோமீட்டர் பகுதியை பிடித்து விட்டதாகவும்ராணுவம் தெரிவித்துள்ளது.
இந்தத் தாக்குதலில் 25 புலிகள் பலியானார்கள். 2 ராணுவ வீரர்கள் இறந்தனர். 6 பேர் காயமடைந்தனர்.












Click it and Unblock the Notifications