காஷ்மீர் விவகாரம்: இந்தியா - பிரான்ஸ் பேச்சுவார்த்தை
பாரிஸ்:
இந்தியா - பிரான்ஸ் நாடுகளுக்கிடையே முக்கிய பேச்சுவார்த்தை ஜனவரி 31ல் பாரிஸ் நகரில் நடைபெறுகிறது. பேச்சுவார்த்தையின் போது காஷ்மீர்விவகாரம் உள்பட பல விஷயங்கள் குறித்து இருநாடுகளும் பேச்சுவார்த்தை நடத்தும்.
1998ல், பிரான்ஸ் அதிபர் ஜாக்கிஸ் சிராக்கின் இந்திய விஜயத்திற்கு பின், ஆரம்பிக்கப்பட்ட இருநாடுகளுக்கிடையேயான முக்கியப் பேச்சுவார்த்தையின் ஆறாவது சுற்றில் கலந்து கொள்ள பிரதமரின் முதன்மைச்செயலர் பிரிஜேஸ் மிஸ்ரா தலைமையில் ஐவர் குழு பாரிஸ் செல்கிறது.
இரண்டாண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் இப்பேச்சுவார்த்தையில் காஷ்மீர் விவகாரம், ரஷ்ய அதிபர் புடின்,சீனத்தலைவர் லீ பெங் ஆகியோரின் இந்திய விஜயம் குறித்து இந்தியா எடுத்துரைக்கும்.
ஐரோப்பிய உச்சி மாநாடு, நேட்டோ நாடுகள் எதிர்நோக்கியுள்ள பிரச்னைகள் குறித்து பிரான்ஸ் இக்கூட்டத்தில்எடுத்துரைக்கும்.
இரண்டு நாட்கள் நடைபெறும் இப்பேச்சுவார்த்தையில், பிரான்ஸின் சார்பில் பிரான்ஸ் அதிபரின் சிறப்புத்தூதர்ஜெரார்டு எர்ரேரா தலைமையிலான குழு கலந்து கொள்கிறது. இப்பேச்சுவார்த்தையின் விபரங்கள் உடனுக்குடன்அதிபர் சிராக்கிற்கு தெரிவிக்கப்படும்.
இந்தியாவைப் பொருத்தவரையில், இப்பேச்சுவார்த்தை, பல வகையில் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். ஏனெனில்,இந்திய அணுவெடி சோதனை, கார்கில் யுத்தம் போன்ற பல விஷயங்களில், தனது நிலைப்பாட்டை ஐரோப்பியநாடுகளுக்கு பிரான்ஸ் மூலமாகவே இந்தியா தெரிவித்து வந்துள்ளது.












Click it and Unblock the Notifications