அரசு மருத்துவமனைகளுக்கு உலக வங்கி உதவி
சென்னை:
தமிழகத்தில் இருக்கும் மாவட்ட தாலுகாக்களில் உள்ள மருத்துவமனைகள் உலக வங்கியின் நிதி உதவி கிடைத்தவுடன் 24 மணி நேர மருத்துவமனைகளாகமாறும் என தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமி சட்டசபையில் தெரிவித்தார்.
இது குறித்து வியாழக்கிழமை சட்டசபையில் கேள்வி நேரத்தின் போது இந்திய கம்யூனிஸ்ட் எம்.எல்.ஏ. சிவபுண்ணியம் கேட்ட துணைகேள்விக்கு அமைச்சர்பதிலளித்த போது கூறியதாவது:
தமிழகம் முழுவதிலும் 200 தொடக்க சுகாதாரத்துறை மருத்துவமனைகள் இருக்கின்றன. இந்த மருத்துவமனைகளை 24 மணி நேர மருத்துமனையாகமாற்ற வேண்டும் என பொதுமக்கள் மற்றும் எம்.எல்.ஏக்கள் கேட்டு வருகின்றனர்.
இந்த மருத்துவமனைகளை 24 மணி நேர மருத்துவமனையாக மாற்ற வேண்டும் என்றால் பல அடிப்படை வசதிகள் வேண்டும். மேலும் மருத்துவர்கள்,நர்ஸ்கள், தொழில் நுட்பபணியாளர்கள் தேவை.
இதற்கு வேண்டிய அளவு நிதி வசதி இல்லாத காரணத்தால் இதை சென்ற ஆண்டு செயல்படுத்த முடியவில்லை. உலக வங்கியிடம் ரூ 650 கோடி நிதி உதவிகேட்டிருக்கிறோம். மத்திய அரசும் உலக வங்கியிடம் பரிந்துறை செய்துள்ளது. நிதி உதவி கிடைத்தவுடன் இந்த மருத்துவமனைகள் 24 மணிநேரமருத்துவமனையாக மாற்றப்படும் என கூறினார்.
-
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications