காஷ்மீர் சண்டை நிறுத்தம் ... 176 பொதுமக்கள் பலி
ஜம்மு:
ரம்ஜான் மாதத்தையொட்டி ஜம்மு - காஷ்மீரில் அறிவிக்கப்பட்ட சண்டை நிறுத்தத்தின் போது தீவிரவாதிகள்தாக்குதலில் 176 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர். 421 பேர் காயமடைந்துள்ளனர் என பிரதமர் வாஜ்பாய்தெரிவித்துள்ளார்.
முஸ்லிம்களால் புனிதமான மாதமாக கருதப்படும் ரம்ஜான் மாதத்தில் ரத்தம் சிந்த வேண்டாம் என்பதை மனதில்கொண்டு ஜம்மு - காஷ்மீரில் இந்திய அரசு சண்டை நிறுத்தத்தை அறிவித்தது. ஆனால் இந்த சண்டை நிறுத்தத்தின்போது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 176 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர் 421 பேர்காயமடைந்துள்ளனர்.
இது குறித்து அரசு தரப்பில் கூறப்படுவதாவது:
நவம்பர் மாதம் 28-ம் தேதி முதல் ஜனவரி மாதம் 24-ம் தேதி வரை அமலில் இருந்து 58 நாள் சண்டை நிறுத்தத்தில்தீவிரவாதிகளால் கொல்லப்பட்ட பொது மக்களின் எண்ணிக்கை 66 சதவிகிதம் உயர்ந்துள்ளது.காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 207 சதவிகிதம் உயர்ந்துள்ளது.
சண்டை நிறுத்தத்திற்கு முன் தீவிர வாதிகளால் 106 பொதுமக்கள் கொல்லப்பட்டனர். 137 பேர் காயமடைந்தனர்.நல்லெண்ண அடிப்படையில் பிரதமரால் அறிவிக்கப்பட்ட சண்டை நிறுத்தத்தை தீவிரவாதிகள் மதிக்காமல்தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு வன்முறையில் ஈடுபட்டு வந்ததையே இந்த செயல்கள்காட்டுகின்றன.
பாகிஸ்தானை சேர்ந்த தீவிரவாதிகள் அப்பாவி மக்களை குறி வைத்து தாக்குதல் நடத்தியுள்ளனர். அதிகமானபொதுமக்கள் கொல்லப்பட்ட இதே காலகட்டத்தில் தீவிரவாதிகள் தரப்பில் அதிகமான இழப்பு ஏற்படவில்லை.
சண்டை நிறுத்த கால கட்டத்தில் 25 தீவிரவாதிகள் மட்டுமே பிடிபட்டிருக்கிறார்கள். சண்டை நிறுத்தத்திற்கு முன் 154தீவிரவாதிகள் பிடிபட்டனர். சண்டை நிறுத்தம் அமலில் இருந்த 58 நாட்களில் 42 தீவிரவாதிகள் சரணடைந்தனர்.
சண்டை நிறுத்தத்தின் போது ராணுவத்தினரின் மீதான தாக்குதல் குறைந்து காணப்பட்டது. சென்ற ஆண்டுஅக்டோபர் 11-ம் தேதி முதல் நவம்பர் 27-ம் தேதிவரை 73 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். ஆனால் தற்போதுசண்டை நிறுத்தம் அமலில் இருந்து வரும் நாட்களில் 57 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர். ஆனால்காயமடைந்தவர்கள் எண்ணிக்கை 123-ல் இருந்து 192 ஆக அதிகரித்துள்ளது என்றார்.
யு.என்.ஐ.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications