மண்ணாகிப் போன "மான்செஸ்டர்
அகமதாபாத்:
குஜராத் மாநிலத்தில் குடியரசு தினத்தன்று ஏற்பட்ட பூகம்பம் அங்குள்ள கட்ச் மற்றும் பல பகுதிகளைச் சேர்ந்த மக்களுக்கு எத்தனை வருடங்கள்ஆனால் மறக்காது.
52 வது குடியரசு தினமான வெள்ளிக்கிழமை ஏற்பட்ட பூகம்பம் 40 வினாடிகள் நீடித்து குஜராத்தையே உலக்கி விட்டது. பூஜ், அகமதாபாத்,ராஜ்கோட், சுரேந்திரநகர் மாவட்டங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டன.
இதுவரை 30,000 பேர் இறந்திருப்பதாக செய்திகள் வந்துள்ளன. பொருட்சேதமும் சொல்ல முடியாத அளவுக்கு ஏற்பட்டுள்ளது. பலர் வீடுகளையும்,உறவினர்களையும் இழந்து அநாதைகளாகியுள்ளனர்.
இந்தியாவின் மான்செஸ்டர் என்றழைக்கப்படும் அகமதாபாத்தில் இயங்கி வந்த பல மில்களும், தொழிற்சாலைகளும் இடிந்து தரைமட்டமாகிவிட்டன.பாதிக்கப்படாத சில தொழிற்சாலைகளும், மில்களும் இன்னும் பூட்டியே உள்ளன.
பூகம்பம் ஏற்பட்டு 3 நாட்கள் ஆகியும், அகமதாபாத்தில் கடைகள், சந்தைகள், வியாபார ஸ்தலங்கள் மூடப்பட்டு கிடக்கின்றன. ஆங்காங்கு வெகுஅரிதாக சில கடைகள் மட்டுமே தென்படுகின்றன. அவற்றின் உரிமையாளர்களும் கூட, வேகமாக வியாபாரத்தை முடித்து விட்டு தங்கள் வீடுகளுக்குத்திரும்பி விடுகிறார்கள். முடிந்த வரை குடும்பத்தினருடன் சேர்ந்து இருப்பதை அவர்கள் விரும்புகிறார்கள்.
வேன் டிரைவர் நூர் முகமது என்பவர் கூறுகையில், பூகம்பத்திற்குப் பின் நாங்கள் மிகவும் பீதியில் உள்ளோம். குறிப்பாக இரவு நேரங்களில் வெளியே எங்கும்செல்வதில்லை. பொருட்கள் போனதைப்பற்றிக் கூட நாங்கள் கவலைப்படவில்லை. ஆனால் குடும்பத்திலுள்ளவர்கள் அனைவரும் உயிருடன் இருக்கவேண்டும் என்று விரும்புகிறோம் என்றார்.
மக்கள் அனைவரும் காலை வேளைகளில் தங்கள் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் யாராவது உயிரிழந்து விட்டனரா என்று சடலங்களைத் தேடும் பணியில்ஈடுபடுகிறார்கள். குஜராத்தில் பூகம்பம் ஏற்பட்டு சேதமடைந்த பகுதிகளில் கிரேன்கள் மற்றும் புல்டோசர்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.மேலும் மீட்புப்பணிகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன.
யு.என்.ஐ.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications