கனடா மேலும் நிதியுதவி
Subscribe to Oneindia Tamil
ஒட்டாவா:
குஜராத் மாநிலத்தில் ஏற்பட்ட பூகம்ப சேத நிவாரணப் பணிகளுக்காக கனடா நாடு மேலும் 1.3 மில்லியன் டாலர்நிதியுதவி அளித்துள்ளது. இதுவரை கனடா, 2 மில்லியன் டாலர் நிதியுதவி அளித்துள்ளது.
இதுகுறித்து கனடா நாட்டு சர்வதேச ஒத்துழைப்புத் துறை அமைச்சர் மரியா மின்னா வெளியிட்ட செய்திக்குறிப்பில்,பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட இந்தியாவுக்கு கனடா தொடர்ந்து உதவி செய்யும். இந்தியாவில் தற்போதுஏற்பட்டுள்ள பூகம்ப நிலையை தொடர்ந்து உன்னிப்பாக கவனித்து வருகிறோம்.
பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவைப்படும் அவசர கால உதவிகளை உடனடியாக கனடா செய்யும். பூகம்பத்தில்20,000 பேருக்கும் மேல் இறந்திருக்கலாம் என்று எதிர்பார்க்கிறோம் என்று கூறியிருந்தார்.












Click it and Unblock the Notifications