குஜராத்துக்கு ரூ. 6 லட்சம் நிதி வழங்குகிறார் ஜெ.
Subscribe to Oneindia Tamil
திருச்சி:
அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா குஜராத் பூகம்பத்தில்பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண நிதியாக ரூ 6 லட்சம் வழங்குகிறார்.
இது குறித்து திருச்சியில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
குஜராத் பூகம்பத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண நிதியாக அ.தி.மு.க. சார்பில்ரூ 6 லட்சம் நிதியாக வழங்கப்படும். அ.தி.மு.க.வின் மருத்துவ பிரிவு மாநிலம்முழுவதும் ரத்த தான முகாமை நடத்தும். அதில் கிடைக்கும் ரத்தம் குஜராத்தில்தேவைப்படுபவர்களுக்கு அளிப்பதற்காக அனுப்பி வைக்கப்படும்.
அ.தி.மு.க. தொண்டர்கள் அனைவரும் இந்த ரத்ததான முகாமில் பெருமளவில் கலந்துகொண்டு ரத்த தானம் வழங்க வேண்டும் என கூறியுள்ளார்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications