வீரப்பன் கேரளாவில் இல்லை .. டி.ஜி.பி.
சென்னை:
சந்தன மரக் கடத்தல் வீரப்பன் கேரளா காட்டிற்குள் சென்றுவிட்டது குறித்துத் தெரியாது. அதுபற்றிபத்திரிகைகள்தான் செய்திகள் வெளியிட்டுள்ளன என்று போலீஸ் டி.ஜி.பி. ராஜகோபாலன் நிருபர்களிடம்தெரிவித்தார்.
சென்னையில், வேலூர் போலீஸ் அதிகாரிகள் சிலருக்கு நடந்த பாராட்டு விழாவில் கலந்து கொண்டு அவர்பேசுகையில், சந்தன வீரப்பனை பற்றி கேரள போலீசார் தகவல் தெரிவிக்கும்பட்சத்தில் அதிரடிப்படை கேரளாவிற்குசெல்வதற்கு தடையேதுமில்லை.
அதிரடிப்படையும், எல்லைப் பாதுகாப்புப் படையும் தீவிர வேட்டையில் ஈடுபட்டு வருவதால் இம்முறை எப்படியும்வீரப்பனை பிடித்துவிட முடியும். வதந்திகளை நம்பாமல் நம்பகமான தகவல்களின் அடிப்படையிலேயே அவர்கள்செயல்படுவதாகக் கூறினார் ராஜகோபாலன்.
கேரளக் காட்டில் வீரப்பன்?
இதற்கிடையே, கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் உள்ள பூயங்குட்டி வனப்பகுதியில் சந்தன மரக்கடத்தல்வீரப்பன் இருப்பதாக வந்த தகவலையடுத்து கேரள வனத்துறையைச் சேர்ந்த ஐந்து கமாண்டோ படைகள்ஆதிவாசிகளின் உதவியுடன் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
வீரப்பன் காணப்பட்டதாகக் கூறப்படும் மலையாத்தூர் வனக்கோட்டத்தைச் சேர்ந்த 15 வனச்சரகங்களும்உஷார்படுத்தப்பட்டுள்ளதாக கேரள வனத்துறை அதிகாரி ஷாகுல் அகமது தெரிவித்தார். 357ச.கீ.மி உள்ளஇவ்வனப்பகுதியில் 10கீ.மி மட்டுமே வாகனங்கள் செல்லமுடியும். மீதிப் பகுதியை நடந்துதான் தேடுதல் வேட்டைநடத்த வேண்டும் என்றார்.
காட்டின் சில பகுதிகளில் கோத்தமங்கலம் சர்க்கிள் இன்ஸ்பெக்டர் மேத்யூ பால் தேடுதல் வேட்டை நடத்தியதாகவும்அவர் தெரிவித்தார்.
யு.என்.ஐ.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications