கொல்கத்தாவிற்கு ஆபத்து
டெல்லி:
அடுத்த 25 ஆண்டுகளில் கல்கத்தா உள்பட 3 பெரிய நகரங்கள் பூகம்பத்தால் அழியும் எனவும், பூகம்ப பாதிப்பால் 30 லட்சம் பேர் பலியாவார்கள்என்றும் புவியில் ஆராய்ச்சியாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அமெரிக்காவில் உள்ள கொலராடோ பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த டாக்டர் பெல்காம் என்ற புவியியல் நிபுணர் பூகம்பம் குறித்து ஒரு ஆய்வுக்கட்டுரைவெளியிட்டுள்ளார்.
இந்த ஆய்வுக்கட்டுரை அமெரிக்க பத்திரிக்கையொன்றில் வெளியாகியுள்ளது. அதில், சமீபகாலமாக உலகம் முழுவதும் அடிக்கடி பூகம்பம்ஏற்படுகிறது. கடந்த நூற்றாண்டைவிட இந்த நூற்றாண்டில் பூகம்பச்சாவு அதிகமாக உள்ளது. உயிரிழப்போர் எண்ணிக்கை வருங்காலத்தில் மிக அதிகமாகஇருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
மேலும், ஒரே பூகம்பத்தில் 10 லட்சம் பேர் பலியாகக்கூடிய அபாயமும் உள்ளது. அடுத்த 25 ஆண்டுகளில் 3 பெரிய நகரங்களை பூகம்பம்தாக்கக்கூடும். இதில் 30 லட்சம் பேர் பலியாவார்கள்.
உலகத்தில் இப்போது 27 பெரிய நகரங்கள் உள்ளன. இதில் இந்தியாவிலுள்ள கொல்கத்தா, அமெரிக்காவிலுள்ள லாஸ் ஏஞ்சல்ஸ், பாகிஸ்தானிலுள்ளஇஸ்லாமாபாத், ஜப்பானிலுள்ள டோக்கியோ, தைவானிலுள்ள தபே, பிலிப்பைன்சிலுள்ள மணிலா, இந்தோனேசியாவிலுள்ள ஜகார்தா, துருக்கியிலுள்ளஇஸ்தான்புல், ஈரானிலுள்ள டெக்ரான், கிரீஸிலுள்ள ஏதென்ஸ் ஆகிய நகரங்கள் பூகம்பத்தால் பாதிக்கப்படக்கூடிய அபாயம் உள்ளது.
பூமியின் அடியிலுள்ள நில அடுக்குகள் ஆங்காங்கே நகர்வதால் இந்த நிலநடுக்கம் ஏற்படுகிறது. நகரும் தன்மை கொண்ட அடித்தளத்தின் மேல் உள்ளநகரங்கள்தான் நிலநடுக்கத்தால் பாதிக்கப்படுகின்றன. பூகம்பம் ஏற்படும் பகுதிகளில் குடியேறுவோரின் எண்ணிக்கை அதிகரிப்பதால் வருங்காலத்தில்பலியாவோரின் எண்ணிக்கையும் அதிகரிக்கும்.
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் 1923 ம் ஆண்டு ஏற்பட்ட பூகம்பத்தில் 1,43,000 பேர் இறந்தனர். இப்போது அங்கு ஒரு கோடி மக்கள்வசிக்கிறார்கள். டோக்கியோவில் நிலநடுக்க அபாயம் உள்ளது.
டோக்கியோவில் நிலநடுக்கம் ஏற்பட்டால் உயிர்ப் பலிகள் லட்சத்தைத் தாண்டுவதோடு மட்டுமல்லாமல் சர்வதேச பொருளாதாரமும் பாதிக்கப்படும்என்றார் பெல்காம்.
அசாம் மாநிலத்தில் வரும் 2010 க்குள் பயங்கர பூகம்பம் ஏற்படக்கூடிய வாய்ப்பு உள்ளது என்று வடகிழக்கு மாநில புவியியல் அமைப்பை ஆய்வு செய்துவரும் பேராசிரியர் சர்மா கூறியுள்ளார்.
இந்தியாவில் மீண்டும் கடுமையான நிலநடுக்கம் ஏற்படக்கூடிய வாய்ப்புக்கள் அதிகம் உள்ளன என்று சீன புவியியல் நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications