அரசு அலுவலகங்கள் ஸ்தம்பிப்பு

Subscribe to Oneindia Tamil

பூஜ்:

குஜராத் மாநிலத்தை உலுக்கி எடுத்த பூகம்பத்தில் பல அரசு ஊழியர்கள் உயிரிழந்து விட்டதால் குஜராத் அரசு அலுவலகங்களில் அலுவலர்கள்பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

அரசு அலுவலகங்களில் வேலைசெய்யும் உயர் அதிகாரிகள் கூறுகையில், பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட அரசு ஊழியர்கள் பலர் வேலைக்கு வரவில்லை.அவர்களுக்கு என்ன ஆனது என்று தெரியவில்லை.

குடியரசு தினத்தன்று குஜராத் மாநிலத்தில் ஏற்பட்ட பூகம்பத்திற்குப்பின் ஒவ்வொரு அலுவலங்களிலும் 100 க்கும் மேற்பட்ட ஊழியர்கள் வேலைக்குவரவில்லை என்றார்.

நிவாரணப்பணிகளை மேற்பார்வையிடும் மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், கட்ச் மாவட்டத்தில் மட்டும் 430 போலீஸ்காரர்கள்உயிரிழந்துள்ளனர். காவல்துறையில் வேலை செய்யும் நூறுக்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர் என்றார்.

தனியார் அலுவலக ஊழியர்களும் நூற்றுக்கணக்கில் பலியாகியுள்ளனர். மேலும் தங்களது உறவினர்கள் இறந்த காரணத்தாலும், வீடு வாசல்களைஇழந்த காரணத்தாலும் நூற்றுக்கணக்கான ஊழியர்கள் அலுவலகங்களுக்கு வரவில்லை.

நிவாரணப் பணிகள், மறுசீரமைப்பு மற்றும் வீடுகள் இடிந்து தரைமட்டமாகி விட்டதால் மீண்டும் வீடுகள் கட்டுவதற்கான உதவி ஆகியவற்றைமத்திய அரசு, செய்து கொடுப்பதாக மாநில அரசுக்கு உறுதி அளித்துள்ளது. இடிபாடுகளுக்கிடையில் சிக்கி உயிரிழந்தவர்களை மீட்கும் பணியில் 20,000க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.

யு.என்.ஐ.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+