பொருள் அனுப்புகிறது பாக்.
இஸ்லாமாபாத்:
குஜராத்தில் பூகம்பம் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு, நிவாரணப் பொருட்களை ஏற்றிக்கொண்டு பாகிஸ்தான் விமானம் செவ்வாய்க்கிழமைஇஸ்லாமாபாத்திலிருந்து செல்லும் என்று அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் அப்துல் சதார் தெரிவித்தார்.
பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்துல் சதார் கூறுகையில், பாகிஸ்தானிலிருந்து விமானம் மூலம் நிவாரணப் பொருட்கள் செவ்வாய்க்கிழமைகுஜராத் செல்லும்.
குஜராத்தில் ஏற்பட்ட துயரமான சம்பவம் எங்களை மிகவும் துக்கத்திற்குள்ளக்கியது. இதே போல் இனிமேல் நடக்கக் கூடாது. மேலும் தங்களதுஉறவினர்களை இழந்து விட்டு உயிர் பிழைத்துத் தவிக்கும் மக்களை நினைத்தால் மிகவும் கஷ்டமாக உள்ளது என்றார்.
முன்னதாக, ராணுவ ஆட்சியாளர் பெர்வீஸ் முஷாரப் கூறுகையில், குஜராத்துக்கு பாகிஸ்தான் அளிக்கும் நிவாரண உதவியை இந்தியா மறுத்து விடும் என்றுஎதிர்பார்த்தோம். இந்தியா, பாகிஸ்தானின் நிவாரணப் பொருட்களை ஏற்றுக் கொண்டது எங்களை மகிழ வைக்கிறது.
பாகிஸ்தான், அதிக அளவில் கம்பளிகள் மற்றும் நிவாரணப் பொருட்களைக் கொடுத்துள்ளது என்றார் அவர்.
இருப்பினும், பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சக அலுவலர் ஒருவர் கூறுகையில், முதலில் கம்பளிகள், கூடாரங்கள் அமைப்பதற்கான பொருட்கள்மற்றும் மருந்துப் பொருட்களை வேண்டாம் என்று இந்தியா கூறியது.
மாறாக, மோப்ப நாய்ப்படையும், இடிபாடுகளுக்கிடையே சிக்கித் தவிக்கும் மக்களைக் கண்டுபிடிக்கத் தேவையான நிபுணர்களையும் அனுப்புமாறு இந்தியாகூறியது. இறுதியில் பாகிஸ்தானின் உதவிகளை ஏற்றுக் கொள்வதாக திங்கள்கிழமை மாலை இந்தியா அறிவித்தது என்றார்.
ஐ.ஏ.என்.எஸ்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications