ராமர் கோவிலை எதிர்ப்போம் .. கருணாநிதி
சென்னை:
பிரச்சனைக்குரிய அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்பட்டால் அதை தி.மு.க.அமைதியாக பார்த்துக்கொண்டிருக்காது என தமிழக முதல்வர் கருணாநிதிகூறியுள்ளார்.
சட்டசபையில் இடைக்கால நிதிநிலை அறிக்கை மீதான விவாதம் செவ்வாய்க்கிழமைநடந்தது. அந்த விவாதத்தின் போது இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் சுப்பராயன்,பாரதீய ஜனதா கட்சி அயோத்தியில் ராமர் கோவில் கட்டும் விஷயத்தில் உறுதியாகஇருப்பதாக கூறினார்.
இதற்கு பதிலளித்து கருணாநிதி கூறுகையில், ராமர் கோவில் கட்டும் விஷயத்தைஎதிர்பதில் தி..மு.க. உறுதியாக இருக்கிறது. இதற்கு பின்னணியில் யார் இருந்தாலும்பிரச்சனைக்குரிய இடத்தில் ராமர் கோவில் கட்டுவதை தி.மு.க. எதிர்த்து வருகிறது எனகூறினார்.
ஆனால் இந்த பதிலால் சமாதானமடையாத சுப்பராயன், பா.ஜ.க. தனதுகொள்கைகளை சங்பரிவார் மூலம் தொடர்ந்து கூறி வருவதாகக் கூறினார்.
இந்நிலையில் இடை மறித்து பேசிய பா.ஜ.க. உறுப்பினர் வேலாயுதன், பிரதமர்வாஜ்பாய் அயோத்தி ராமர் கோவில் விஷயத்தில் உச்ச நீதிமன்றத் தீர்ப்பை ஏற்றுக்கொள்ளலாம் அல்லது பேச்சு வார்த்தை மூலம் தீர்வு காணலாம் என பிரதமர் வாஜ்பாய்கூறியதை சுட்டிக் காட்டினார்.
ஆனால் சுப்பராயன், இது அம்மண சாமியார்களால் (இந்தி நிர்வாண சாமியார்கள்)ஒப்புக் கொள்ளப்படவில்லை என சுப்பராயன் கூறினார்.
அப்போது குறுக்கிட்ட முதல்வர் ஜெயலிதாவைக் குறிக்கும் விதமாக, அம்மணசாமியார்கள் ஒப்புக் கொள்ளாவிட்டாலும், அம்மணி சாமியார்களால் ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது என கூறினார்.
முதல்வர் ஜெயலலிதாவைதான் குறிப்பிடுகிறார் என புரிந்து கொண்ட சுப்பராயன்,மதுரையில் ஜெயலலிதாவும் இதற்கு எதிர்ப்புதான் தெரிவித்திருக்கிறார் என்றார்.
அப்போது, நான் யாரை குறிப்பிட்டேன் என்பதை சுப்பராயன் சரியாக புரிந்துகொண்டது குறித்து மகிழ்சியடைகிறேன் என கூறியதும் அவையில் பெரும் சிரிப்பலைகிளம்பியது.
யு.என்.ஐ.
-
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம்












Click it and Unblock the Notifications