பெண் மீது கை போட்ட இந்திய என்ஜீனியருக்கு சிறை
சிங்கப்பூர்:
சிங்கப்பூர் விமானத்தில் பயணித்த பெண் பயணியிடம் தவறாக நடந்து கொண்டதற்காக, இந்தியாவைச் சேர்ந்தகம்ப்யூட்டர் என்ஜீனியருக்கு ஒரு ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவைச் சேர்ந்தவர் ஸ்வரூப் தாஸ் (வயது 27). இவர் சிங்கப்பூரில் கம்ப்யூட்டர் என்ஜீனியராக இருந்துவருகிறார். கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 8-ம் தேதி இவர் அமெரிக்காவிலிருந்து சிங்கப்பூர் செல்லும் ஒருவிமானத்தில் பயணம் செய்து கொண்டிருந்தார்.
சான்பிரான்ஸிஸ்கோ நகரில் ஒரு பெண் (வயது 32) அந்த விமானத்தில் ஏறினார். ஸ்வரூப் தாஸுக்கு அடுத்தஇருக்கையில் அவர் பயணித்தார். விமானம் சென்று கொண்டிருந்தபோது, அந்தப் பெண் தூக்கத்தில் ஆழ்ந்தார்.அப்போது ஸ்வரூப் தாஸின் கை அந்தப் பெண்ணின் மீது விழுந்தது.
தூக்கத்தில் ஸ்வரூப் தாஸின் கை தவறுதலாக விழுந்திருக்கலாம் என்று நினைத்த அந்தப் பெண் கையை எடுத்துவிட்டிருக்கிறார். அரை மணி நேரம் கழித்து மீண்டும் அவர் மீது கை விழுந்தது. அப்போதுதான் வேண்டுமென்றேஸ்வரூப்தாஸ் இப்படிச் செய்துள்ளார் என்பதை அவர் உணர்ந்தார்.
இதையடுத்து விமான ஊழியர்களிடம் கூறி அவரும், இன்னொரு பெண் பயணியும், வேறு இருக்கைக்கு மாறிக்கொண்டனர். இதுகுறித்து விமானம் சிங்கப்பூர் வந்ததும் போலீஸில் புகார் கொடுத்தார் அந்தப் பெண்.
ஸ்வரூப் தாஸ் கைது செய்யப்பட்டார். அவரிடம் விசாரணை நடத்திய சிங்கப்பூர் கோர்ட், ஸ்வரூப் தாஸிற்கு ஒருஆண்டு சிறைத் தண்டனை மற்றும் 3 சவுக்கடிகள் கொடுக்க உத்தரவிட்டது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications