பரிதாப நிலையில் நிவாரணம்
பச்சாவ் (குஜராத்):
குஜராத் மாநிலம் கட்ச் மாவட்டத்தில் பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட கிராமங்களுக்கு கொண்டு செல்ல வழியில்லாமல் துணிமணிகள் கட்ச் மாவட்டநெடுஞ்சாலைகளில் ஆங்காங்கே சிதறிக் கிடக்கின்றன.
குஜராத்தில் ஜனவரி 26 ம் தேதி ஏற்பட்ட பூகம்பத்தையடுத்து இந்தியா மட்டுமன்றி வெளி நாடுகளிலிருந்தும் நிவாரணப் பொருட்கள், நிதியுதவிகள் குவிந்தவண்ணம் உள்ளன. ஆனால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக கொடுக்கப்பட்ட துணிமணிகள் அகமதாபாத் - பூஜ் நெடுஞ்சாலையில் கிடக்கின்றன.அவற்றை தொலைதூர கிராமங்களுக்கு எடுத்துச் செல்ல சரியான போக்குவரத்து வசதி இல்லாததால் இந்த அவல நிலை.
அகமதாபாத் - பூஜ் நெடுஞ்சாலையில் செல்லும் சாலையோரச் சிறுவர்கள் துணிவகைகளைக் கிளறி தங்களுக்குத் தேவையானவற்றை எடுத்துக் கொண்டுசென்று விடுகிறார்கள். பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட கட்ச் மாவட்டம் மற்றும் பூஜ் நகரங்களில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு, உடை, மருந்துப்பொருட்கள், குடிநீர் மற்றும் நிவாரணப்பொருட்கள் எதுவுமேயில்லை.
ஜனவரி 26 ம் தேதி ஏற்பட்ட பூகம்பத்திற்குப்பின், இந்தியாவிலிருந்தும், வெளிநாடுகளிலிருந்தும் வந்து குவிந்த நிவாரணப் பொருட்கள் குஜராத்துக்குக்கொண்டு செல்லப்பட்டன. இருப்பினும் முறையான விநியோகம் இல்லாத காரணத்தால் பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட கிராம மக்கள் இன்னும் நிவாரணப்பொருட்கள் கிடைக்காமல் பரிதவித்து வருகிறார்கள்.
அரசு சாரா நிறுவனங்கள் கட்ச் மற்றும் பூஜ்ஜில் முகாமிட்டு குடிநீர், உணவு, ஆகியவற்றை சாலையோரங்களில் தவித்து நிற்கும் மக்களுக்கு விநியோகித்துவருகிறார்கள். ஆனால் பச்சாவ் நகரத்திலுள்ள பல கிராம மக்கள் இன்னும் குடிதண்ணீர் கூட கிடைக்காமல் தவித்து வருகிறார்கள்.
பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட பச்சாவ் நகரையடுத்து இருக்கும் பல நகரங்களில் மீட்புப்பணிகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன. இடிபாடுகளுக்கிடையில்சிக்கித் தவிக்கும் மக்களை மீட்கும் பணியும் முழுவீச்சில் நடந்து வருகிறது.
ஐ.ஏ.என்.எஸ்.
-
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு! -
ஸ்டாலின் கொண்டு வந்த காலை உணவு திட்டம் தொடரும்.. மெனு மாற்றம்.. அமைச்சர் ராஜ்மோகன் உறுதி












Click it and Unblock the Notifications