உதவிக்கு வருகிறார் ரித்திக்
டெல்லி:
குஜராத்தில் ஏற்பட்ட பூகம்பத்தின் கோரப்பசிக்கு தங்கள் உறவினர்கள், உடைமைகளைப் பறிகொடுத்துத் தவிக்கும்மக்களுக்கு தனது ரசிகர்கள் நிதியுதவியோ அல்லது தங்களால் முடிந்த பிற உதவியோ செய்ய வேண்டும் என்றுஇந்தித் திரைப்பட முன்னணி நடிகர் ரித்திக் ரோஷன் வியாழக்கிழமை வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுகுறித்துக் நடிகர் ரித்திக் ரோஷன் வெளியிட்டுள்ள அறிக்கையில், குஜராத்தில் ஏற்பட்ட பூகம்பத்துக்கு மத்தியஅரசு தேவைக்கு அதிகமாகவே நிவாரண உதவிகளைச் செய்து வருகிறது. சர்வதேச நாடுகளிலிருந்தும் அதிகஅளவு உதவிகள் குவிந்து வருகின்றன. இது மிகவும் மகிழ்ச்சியடைய வைக்கிறது.
நாம் அனைவரும் குஜராத் மக்களின் வலிகளையும், வேதனைகளையும் பகிர்ந்து கொள்வோம். நம்மால் முடிந்தஅளவு அவர்களுக்கு உதவி செய்வோம். எனது ரசிகர்கள் அனைவரும் குஜராத் மக்களுக்கு உதவ வேண்டும் என்றுதனது அறிக்கையில் கூறியுள்ளார் ரித்திக் ரோஷன்.
ஐ.ஏ.என்.எஸ்.












Click it and Unblock the Notifications