பாலசிங்கத்தைச் சந்தித்தது நார்வே தூதுக்குழு
கொழும்பு:
இலங்கைப் பிரச்சினையை முடிவுக்கு கொண்டுவர இலங்கை அரசுக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையே சமரச முயற்சியில் ஈடுபட்டு வரும் நார்வேதூதுக்குழு, லண்டனில் விடுதலைப்புலிகள் இயக்கத்தை சேர்ந்த ஆன்டன் பாலசிங்கத்தை சந்தித்து பேசியது.
முன்னதாக புலிகள் இயக்கத்தலைவர் பிரபாகரனை சந்தித்த தூதுக்குழு போர்நிறுத்தத்தை அறிவித்து அரசுடன் பேச்சுவார்த்தை நடத்துமாறு கூறியது.
இலங்கை அரசு புலிகள் நிபந்தனையற்ற பேச்சுவார்த்தைக்கு ஒத்துக்கொள்ள வேண்டும் எனவும் பேச்சுவார்த்தை முடியும் வரை போர்நிறுத்தம் கிடையாதுஎனவும் தெரிவித்தது.
இதனால் சமரச முயற்சியில் முட்டுக்கட்டை ஏற்பட்டது. இந்நிலையில் நார்வே தூதுக்குழு புலிகள் இயக்கத்தின் பாலசிங்கத்தை சந்தித்து வடகிழக்கு மாகாணபிரச்சினை மற்றும் அதனை தீர்ப்பது குறித்து விவாதித்தது.
அரசுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு புலிகள் இயக்கத்தின் மற்ற தலைவர்களை இத்தூதுக்குழு சந்தித்து வலியுறுத்தவுள்ளது.
அதன்பிறகு இலங்கை திரும்பி ஆளுங்கட்சித் தலைவர்களையும், எதிர்க்கட்சித் தலைவர்களையும் சந்தித்து புலிகள் மற்றும் அரசுக்கிடையே பேச்சுவார்த்தைநடத்த எடுத்துள்ள முயற்சி குறித்து விவாதிக்கும்.
பின்னர் இலங்கை அதிபர் சந்திரிகா குமாரதுங்காவைச் சந்தித்து தூதுக்குழு பேச்சுவார்த்தை நடத்தும் என்று தூதுக்குழுவின் தலைவர் எரிக் சோல்ஹீம்தெரிவித்தார்.
-
Kuwait மீது திடீர் தாக்குதல் நடத்திய ஈரான்.. திரும்பும் பக்கமெல்லாம் ஏவுகணை சந்தம்.. பீதியில் மக்கள்! -
போங்க தம்பி.. டிரம்ப்-க்கு மீண்டும் பல்பு கொடுத்த ஈரான்.. அடுத்தது என்ன நடக்கும்? -
மொத்த இந்தியாவுக்கும் குட்நியூஸ்.. கச்சா எண்ணெய் விலை பெரும் சரிவு.. அப்போ பெட்ரோல், டீசல் விலை குறையுமா? -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications