அப்துல் லத்தீப் - அமைச்சர்கள் காரசார வாக்குவாதம்
சென்னை:
தமிழக சட்டசபையில், அமைச்சர் மற்றும் துணை சபாநாயகருடன் மோதியபின் இந்திய தேசிய லீக் தலைவர் அப்துல் லத்தீப் சட்டசபையிலிருந்து வெளிநடப்பு செய்தார்.
அக்கட்சியின் நிஜாமுதீன் இடைக்கால பட்ஜெட் மீது பேசிக் கொண்டிருந்த போது குறுக்கிட்டு பேசிய லத்தீப், திருநெல்வேலி கொலைச் சம்பவம் தொடர்பாககைது செய்யப்பட்ட அனைவரையும் விடுதலை செய்யுமாறு கோரினார்.
சி.பி.சி.ஐ.டி. பிரிவினர் முதல் தகவல் அறிக்கை அளித்த பின் லத்தீபின் கோரிக்கை குறித்து பரிசீலிக்கப்படும் என்று சுகாதாரம் மற்றும் மின்துறை மந்திரிஆற்காடு வீராச்சாமி கூறியபோதும் லத்தீப் விடாமல் அமைச்சரிடம் வாக்குவாதம் செய்து தி.மு.க. அரசை குறை கூறினார். இதனையடுத்து அமைச்சர்,லத்தீபின் நிலைதான் பரிதாபத்துக்குரியது என்று கூறியதையடுத்து இருவருக்குமிடையே வாக்குவாதம் முற்றியது.
வாக்குவாதத்தின் ஒரு கட்டத்தில் லத்தீப், தி.மு.க. இருக்கும் இடம் பரிதாபத்துக்குரியது (தி.மு.க. - பா.ஜ.க கூட்டணிக்காக) என்றதால், வீராசாமியும்,அ.தி.மு.க.வுடன் இருக்கும் லத்தீபின் நிலைதான் பரிதாபத்துக்குரியது என்றார். மேலும் யார் நிலைமை சரியானது என்று மக்கள் முடிவு செய்வார்கள் என்றார்அமைச்சர்.
தான் இருக்குமிடம் சரியானது தான் என்பதை நிரூபிப்போம் என்று லத்தீப் கூறியபோது ஆயிரம் லத்தீபுக்கள் இணைந்து முயற்சித்தாலும் அது முடியாது என்றஅமைச்சர் கடந்த நான்காண்டுகளில் அ.தி.மு.க.வுக்கு எதிராக லத்தீப் பேசிய பேச்சுகளிலிருந்தே இது தெரியும் என்றார்.
இந்த வாக்குவாதத்தில் குறுக்கிட்ட கல்வியமைச்சர் அன்பழகன் மக்களின் நாடித்துடிப்பை அறியக்கூடிய ஜோசியர் யாருமில்லை என்றார். சட்டமன்றஎதிர்க்கட்சித் தலைவர் சோ.பாலகிருஷ்ணன், விவாதத்தை முடிவுக்கு கொண்டுவர திருநெல்வேலி வழக்கை சி.பி.சி.ஐ.டி. வசம் ஒப்படைக்கவேண்டும் என்று கருத்துதெரிவித்தார்.
விவாதம் முடிந்து அமைதி திரும்பிய போது நிஜாமுதீனுக்கு அளிக்கப்பட்ட நேரம் முடிந்ததால் , சபையை நடத்திய துணை சபாநாயகர் அடுத்த உறுப்பினரை பேசஅழைத்தார். இதனை ஆட்சேபித்த லத்தீப் தன்கட்சி உறுப்பினர் பேசுவதற்கு வேண்டுமென்றே வாய்ப்பு மறுக்கப்படுவதாக கூறியவர் தி.மு.க. மீண்டும்பதவிக்கு வரமுடியாது என்று தெரிவித்து சபையைவிட்டு வெளியேறினார்.
யு.என்.ஐ.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications