திமுகவால் மக்களுக்கு லாபமில்லை .. த.மா.கா.
சென்னை:
தி.மு.க.வை தேசிய ஜனநாயக கூட்டணியிலிருந்து விலகுமாறு, தமிழக சட்டசபை எதிர்கட்சி தலைவர் சோ. பாலகிருஷ்ணன் கேட்டுக் கொண்டார்.
சட்டசபையில் இடைக்கால பட்ஜெட் மீதான விவாதத்தின் போது எதிர்கட்சி தலைவர்பாலகிருஷ்ணன் பேசியதாவது:
மதசார்புடைய பா.ஜ.க. கூட்டணியில் தி.மு.க. இருக்கும் வரை அக்ட்சியின்மதச்சார்பின்மை கொள்கை குறித்த சந்தேகம் இருக்கும். எனவே தி.மு.க. தேசியஜனநாயக கூட்டணியிலிருந்து விலக வேண்டும்.
தி.மு.க. மத்தியில் ஆளும் கட்சியுடன் கூட்டணி வைத்துக் கொண்டிருப்பதால்தமிழதுக்கு எந்த விதமான லாபமும் கிடைக்கவில்லை. இதை முதல்வரே நிதிநிலைஅறிக்கை சமர்பிக்கும் போது ஒப்புக் கொண்டுள்ளார்.
நிதிநிலை அறிக்கையில் ஏற்பட்டுள்ள பற்றாகுறை மத்திய அரசின் முடிவால்தான் எனமுதல்வரே கூறியிருந்தார். பா.ஜ.க.தலைமையிலான அரசு, தமிழக தேயிலைவிவசாயிகளுக்கு உதவும் விதமாக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
பிரதமர் வாஜ்பாய் ஜனவரி மாதம் 31-ம் தேதி சென்னைக்கு தாமதமாகத்தான் வந்துசேர்ந்தார். அதற்கு காரணம் அவர் லக்னோவில் காஷ்மீர் திவிரவாதிகள் தாக்குதலில்கொல்லப்பட்ட கேப்டந் நவ்நீத் ராய் என்பவரின் மரணத்திற்கு அஞ்சலி செலுத்தி மலர்வளையம் வைத்து விட்டு வந்ததுதான்.
ஆனால் அதே சமயம் காஷ்மீர் தீவிரவாதிகளால் கொல்லப்பட்ட முஸ்லீம்சமுதாயத்தைச் சேர்ந்த ஜாபர் அலிக்கு எந்த வித மரியாதையையும் செய்யாததுவருந்தத்தக்து.
ஜாபர் அலியின் உடல் டெல்லிக்கு கொண்டுவரப்பட்ட போது இறந்த அந்த வீரரின்உடலை பெற்றுக் கொள்ள எந்த அரசியல் கட்சியினரோ அல்லது அரசு அதிகாரிகளோவிமானநிலையத்திற்கு வரவில்லை.
ஜாபர் அலியின் தந்தை என் மகன் இந்துவாக பிறந்திருந்தால் அவனுக்கு தேவையானமரியாதைகள் செலுத்தப்பட்டிருக்கும் என வருத்தத்துடன் கூறியிருந்தார் என்பதுகுறிப்பிடத்தக்கது என்றார்.
எதிர்க்கட்சி தலைவர் பாலகிருஷ்ணன் தி.மு.க. தேசிய ஜனநாயக கூட்டணியிலிருந்துவிலக வேண்டும் என கூறியதற்கு அவையிலிருந்த
முதல்வர் எந்த விதமான பதிலும் கூறவில்லை.
யு.என்.ஐ.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications