ஜம்முவில் ஊரடங்கு உத்தரவு
ஜம்மு:
ஜம்மு மற்றும் உத்தம்பூரில் காலவரையற்ற ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஸ்ரீநகருக்கு 4 பேர் கொண்ட குழுவை பிரதமர்அனுப்பியுள்ளார்.
மத்திய உரத்துறை இணை அமைச்சர் சுக்தேவ் சிங் தின்ஸா, மத்திய இணை அமைச்சர் சமன்லால் குப்தா, சிறுபான்மையினர் கமிஷன் உறுப்பினர் தர்லோசன் சிங்மற்றும் மூத்த பா.ஜ.க தலைவர் எஸ்.எஸ்.அலுவாலியா ஆகியோரை சம்பவம் பற்றி விசாரித்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறுமாறுபிரதமர் அனுப்பி வைத்துள்ளார்.
சனிக்கிழமையன்று கொல்லப்பட்ட 6 சீக்கியர்களின் உடல்கள் ஞாயிறன்று தகனம் செய்யப்பட்டன. இறுதி ஊர்வலத்தில் நூற்றுக்கணக்கான சீக்கியர்கள்கலந்து கொண்டனர். இக்கட்டான சூழ்நிலையில் சட்டம் ஒழுங்கை காப்பாற்ற வேண்டிய நிலையில் போலீசார் உள்ளனர். இதற்காகத்தான் காலவரையற்றஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக போலீஸ் உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
சீக்கிய மக்கள் குறி வைத்து தாக்கப்படுவதாக சீக்கிய மதத்தலைவர்கள் தெரிவித்துள்ளனர். கடந்த மார்ச் மாதம் 35 சீக்கியர்கள் காஷ்மீரின்தென்பகுதியில் உள்ள செட்டிசிங்கபூரில் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தங்களின் உயிருக்கு பாதுகாப்பு இல்லாததால் இப்பகுதியிலிருந்து வெளியேற தாங்கள் விரும்புவதாக சம்பவம் நடைபெற்ற மேஜோர் நகரைச் சேர்ந்தராஜேந்திர சிங் கூறினார்.
ஐ.ஏ.என்.எஸ்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications