பூகம்பத்திலிருந்து மீளுவோம்
அபு தாபி:
குஜராத் பூகம்பம் போன்ற இயற்கை சீற்றங்களால் ஏற்படும் பாதிப்புக்களை சமாளிக்கும் திறன் இந்தியாவிற்குஉண்டு என்று இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜஸ்வந்த் சிங் தெரிவித்தார்.
எகிப்திலிருந்து இந்தியா திரும்பும் வழியில் அபு தாபியில் சிறிது நேரம் தங்கிய அவர் அங்குள்ள இந்தியத் தூதரின்இல்லத்தில் இந்திய வம்சாவளியினரை சந்தித்து பேசினார்.
கடந்த காலங்களிலும் புயல் போன்ற இயற்கை சீற்றங்களால் பாதிக்கப்பட்ட போதும் அதனை சமாளித்து மீண்டுவந்தோம். அதுபோல், இம்முறையும் பாதிப்புகளிலிருந்து மீள்வோம்.
ஐக்கிய அரபு நாடுகளின் செஞ்சிலுவைச் சங்கம் அளித்த நிவாரணப் பொருட்களை அளித்துள்ளது. இந்தஉதவியானது உலக நாடுகள் அனைத்தும் ஒரு குடும்பமாக இருப்பதை உணர்த்துகிறது என்றார்.
நிவாரணப் பொருட்களுடன், இந்திய சமுதாய மையம் அளித்த 2 லட்ச ரூபாய் நிதியுதவியை பெற்றுக் கொண்டுபின்னர் அவர் இந்தியா திரும்பினார்.
யு.என்.ஐ.


Click it and Unblock the Notifications
