லண்டன் டாக்டர் சாவு

Subscribe to Oneindia Tamil

லண்டன்:

இங்கிலாந்தைச் சேர்ந்த டாக்டர் அசோக் நாத்வானி, குடியரசு தினத்தன்று குஜராத்தில் இருந்ததால் அவரும் பூகம்பத்தில் பலியாகி விட்டார் என்றுதெரிய வந்துள்ளது.

இங்கிலாந்தைச் சேர்ந்தவர் டாக்டர் அசோக் (40). இவர் தனது நண்பர்கள் சிலரைப் பார்ப்பதற்காக இந்தியாவில் தங்கியிருந்தார். பின்னர் இங்கிலாந்துக்குத்திரும்பிச் செல்வதற்குள் பூகம்பத்தில் பலியாகி விட்டார்.

இந்தியா வந்திருந்த டாக்டர் அசோக், பரோடாவில் தனது நண்பர்களைச் சந்தித்து விட்டு மும்பைக்குச் சென்று அங்கிருந்து இங்கிலாந்து செல்லத்திட்டமிட்டிருந்தார்.

ஆனால் துர்திர்ஷ்டவசமாக டெல்லி போக்குவரத்து நெரிசலில் சிக்கிக் கொண்ட இவர் விமானநிலையத்திற்கு மிகவும் தாமதமாக வந்தார். இதனால்அவரால் திட்டமிட்டபடி பரோடா சென்று தனது நண்பர்களைப் பார்க்க முடியவில்லை. இதனால் அடுத்த நாள் இன்னொரு விமானம் மூலம் அகமதாபாத்வந்தார் டாக்டர் அசோக். அங்கிருந்து பரோடா சென்று தனது நண்பர்களைப் பார்க்கத் திட்டமிட்டார்.

அகமதாபாத்தில் அவர் தனது உறவினரின் வீட்டில் தங்கியிருந்த அவர், இங்கிலாந்தில் உள்ள தனது மனைவிக்கு போன் செய்து தான் விரைவில்வந்துவிடுவதாகக் கூறினார்.

ஆனால் அடுத்த நாள் ஜனவரி 26 ம் தேதி பூகம்பம் வந்து விட்டதால் அவர் இடிபாடுகளில் சிக்கி உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தார். இருப்பினும்அங்கிருந்து உடனடியாக அகமதாபாத் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார்.

பூகம்பத்தில் சிக்கி உயரிழப்பதற்கு முன்பு டாக்டர் அசோக், ஆக்ராவில் 20 டாக்டர்கள் கலந்து கொண்டு இந்தியாவில் குழந்தைகள் நலமருத்துவமனைகளின் தரத்தை உயர்த்துவது குறித்து ஆலோசனை நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஐ.ஏ.என்.எஸ்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+