அரசுக்கு கோர்ட் நோட்டீஸ்
டெல்லி:
பூகம்பம் ஏற்பட்டால் அதை சமாளிப்பது, மறுசீரமைப்புப் பணிகளை மேற்கொள்வது, அவசர கால நடவடிக்கைகள் எடுப்பது ஆகியவற்றைமுன்கூட்டியே முடிவு செய்யும் வகையில் தேசிய அளவிலான பூகம்பக் கொள்கையை வரையறுக்கும்படி, கோரித் தொடரப்பட்ட வழக்கில், அரசுக்குடெல்லி உயர்நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை நோட்டீஸ் அனுப்பியது.
டெல்லி உயர்நீதிமன்றத்தில் பஞ்சாப் பாட்டியாலா பல்கலைக்கழக மாணவர் சரண்சிங் இந்த மனுவைத் தாக்கல் செய்திருந்தார். மனுவில் அவர்கூறியிருந்ததாவது:
இந்தியாவில் கடந்த 15 வருடங்களில் 6 முக்கிய பூகம்பங்கள் ஏற்பட்டுள்ளன. ஆனால் இத்தனை பூகம்பங்கள் ஏற்பட்டும் பூகம்பப் பேரழிவுகளைச்சமாளிப்பதற்காக எந்த முன் நடவடிக்கையையும் அரசு மேற்கொள்ளவில்லை.
ஜனவரி 26 ம் தேதி குஜராத் மாநிலத்தில் பூகம்பம் ஏற்பட்டதில் பலர் உயிரிழந்துள்ளனர். பலர் வீடுகளை இழந்து தவித்து வருகின்றனர். அரசு இன்னும்அதிகமாக உஷாராகவும், பூகம்பத்தைச் சமாளிக்கும் வகையில் முன்பே திட்டமிட்டிருக்க வேண்டும்.
பூகம்ப அபாயம் உள்ள இடங்களில் உள்ள மக்களை முன்பே உஷார் படுத்தியிருந்தால் பூகம்பத்தால் ஏற்பட்ட உயிர்ச்சேதம் மற்றும் பொருட்சேதத்தைகுறைத்திருக்கலாம் என்று அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.
மனுவை விசாரித்த நீதிபதிகள் அனில் தேவ் சிங், திவேதி ஆகியோர், மத்திய அமைச்சரவை செயலகம், அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சர்,உள்துறை அமைச்சர், நகர்ப்புற வளர்ச்சித் துறை மற்றும் இந்திய மண்ணியல் ஆராய்ச்சியக அதிகாரிகள் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பி மார்ச் 28 ம்தேதிக்குள், பதில் அளிக்குமாறு உத்தரவிட்டனர்.
யு.என்.ஐ.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications