"சகோதரி ஜெயலலிதாவிடம் சொல்லி விட்டேன் ..

Subscribe to Oneindia Tamil

சென்னை:

பாட்டாளி மக்கள் கட்சியை அழிக்கப் பார்த்தார் திமுக தலைவரும், முதல்வருமான கருணாநிதி. ஆனால்ஜெயலலிதா எங்களைக் காக்கப் பார்த்தார். எனவேதான் அதிமுகவில் சேர்ந்துள்ளோம் என்று கூறியுள்ளார்அதிமுக கூட்டணியில் புதிதாக இணைந்துள்ள பா.ம.க. தலைவர் டாக்டர் ராமதாஸ்.

திங்கள்கிழமை திடீரென தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து வெளியேறுவதாக அறிவித்த பாட்டாளி மக்கள்கட்சி, செவ்வாய்க்கிழமை காலை அதிமுக கூட்டணியில் இணைந்து விட்டது.

அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவைச் சந்தித்துப் பேசிய பிறகு கூட்டணியில் இணைந்தது தொடர்பாகஅறிவித்தார் கட்சியின் நிறுவனத் தலைவரான டாக்டர் ராமதாஸ்.

செய்தியாளர்கள் கூட்டத்தில் அவர் பேசுகையில், மிகவும் காட்டமாக திமுகவை விமர்சித்தார். அவர் கூறுகையில்,தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகளில் திமுகவைத் தவிர வேறு எந்தக் கட்சியுடனும்எங்களுக்கு மோதல் இல்லை.

தமிழக ராஜீவ் காங்கிரஸ் மற்றும் அக்கட்சியின் தலைவர் வாழப்பாடி ராமமூர்த்திக்கும் எங்களுக்கும் இடையேமோதல் ஏற்பட்டபோது அதைக் கண்டுகொள்ளாமல் பெரிதுபடுத்திவிட்டார் கருணாநிதி.

தமிழகத்தில் பா.ம.கவை அழிக்கப் பார்த்தார் கருணாநிதி. இதனால்தான் இந்தக் கூட்டணியிலிருந்து விலகவேண்டும் என்ற எண்ணமே எங்களுக்கு வந்தது. அதேசமயம், எங்களிடம் நட்பு பாராட்ட விரும்பினார்ஜெயலலிதா.

வருகிற சட்டசபைத் தேர்தலில் தொகுதிப் பங்கீடு தொடர்பாக பொருத்தமான நேரத்தில் அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவுடன் பேச்சு நடத்துவோம். எத்தனை சீட்டுகள் கேட்கப் போகிறோம் என்பதை இப்போதேகூற முடியாது.

வாழப்பாடி ராமமூர்த்தி, என்னைப் பற்றித் தாறுமாறாக அறிக்கை விட்டபோதெல்லாம் அதைத் தடுக்க மறந்தார்கருணாநிதி. மாறாக, அந்த அறிக்கைகளை ரசித்தார்.

இதை விட ஒரு படி மேலே போய், என்னைப் பற்றி விமர்சிப்பதற்காக வாழப்பாடி ராமமூர்த்தி திண்டிவனத்தில்கூட்டம் போட்டார். அதற்குக் கூட்டம் கூட்டித் தர வேண்டுமென்று திண்டிவனம் எஸ்.பியைக் கேட்டுக் கொண்டார்கருணாநிதி.

எனக்கும் வாழப்பாடிக்கும் உள்ள பிரச்சினை குறித்து விவாதிப்பதற்காக 6 தடவை கருணாநிதியைச் சந்தித்தேன்.ஆனால் பூசலைத் தீர்க்க கருணாநிதி முயலவே இல்லை.

எனது கட்சித் தொண்டர்கள் 21 பேரை தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழும், ஆறு பேரை குண்டர் சட்டத்தின் கீழும்கைது செய்ய உத்தரவிட்டார் கருணாநிதி. இந்தச் சூழ்நிலையில், பாட்டாளி மக்கள் கட்சியிலுள்ள ஒருவர் கூட திமுககூட்டணியில் நீடிக்க விரும்பவில்லை என்றார் ராமதாஸ்.

எங்களது கருத்துக்கள் அனைத்தையும் சகோதரி ஜெயலலிதாவிடம் சொல்லி விட்டேன் என்றார் ராமதாஸ்.

பாண்டிச்சேரியில் பா.ம.கதான் ஆட்சி அமைக்கும் என்ற கருத்தைஇப்போதும் உங்கள் கட்சி வலியுறுத்துகிறதாஎன்ற கேள்விக்குப் பதிலளிக்க மறுத்து விட்டார் ராமதாஸ்.

யு.என்.ஐ.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+