த.மா.கா வை இழுக்க பழனிவேல் ராஜன் முயற்சி
மதுரை:
தமிழ் மாநில காங்கிரசை மீண்டும் தி.மு.க. கூட்டணியில் சேர்க்கும் முயற்சிகள் நடந்து வருகின்றன. இதற்கானமுயற்சியில் தமிழக சட்டசபை சபாநாயகர் பழனிவேல் ராஜன் ஈடுபட்டுள்ளார்.
தமிழக அரசியலில் பல மாற்றங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன. தி.மு.க. அணியில் இருந்து வந்த பாட்டாளி மக்கள்கட்சி அந்த அணியிலிருந்து விலகியுள்ளது.
அது அ.தி.மு.க. அணியில் இணையும் வாய்ப்புகள் உருவாகியுள்ளது. இதன் காரணமாக த.மா.கா. கேட்கும்அளவுக்கு சீட் கிடைக்காமல் போகும் வாய்ப்பு உருவாகியுள்ளது.
இதனால் த.மா.கா. தனிமைப்படும் நிலைமை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்ள தி.மு.க. முடிவெடுத்துள்ளது. த.மா.கா. வை மீண்டும் தி.மு.க. கூட்டணியில் இணைக்கும் முயற்சியும்நடைபெற்று வருகிறது.
த.மா.கா. தலைவர் மூப்பனார் பல முறை தி.மு.க.வை தாக்கி பேசிய போதும் அதற்கு பதில் கூறாமல் மெளனமாகஇருந்து வந்தார் கருணாநிதி. த.மா.கா.வுடன் மீண்டும் உறவு ஏற்படுத்துவதற்கான முயற்சியை பழனிவேல்ராஜனிடம் கட்சி தலைமை கொடுத்திருப்பதாக தெரிகிறது. இதை பழனிவேல் ராஜனே ஒப்புக் கொண்டுள்ளார்.
மதுரையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு அவர் பேசுகையில், மூப்பனார் அ.தி.மு.க. அணியில் சேர்ந்துதேர்தலில் போட்டியிட போவதாக கூறப்படுவது தவறு. மூப்பனார் இதுவரை எந்தவிதமான முடிவும்எடுக்கவில்லை.
த.மா.கா. மீண்டும் தி.மு.க. கூட்டணியில் இணைய வேண்டும் என நான் விரும்புகிறேன். இதற்கான முயற்சியிலும்நான் ஈடுபட்டுள்ளேன். என் முயற்சி பலிக்கும் என நம்புகிறேன். தேர்தலில் தி.மு.க., த.மா.கா., கூட்டணி இணைந்துபோட்டியிடும் என நம்புகிறேன் என்றார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications