உதவுகிறது சவுதி அரேபியா
டெல்லி:
சவுதி அரேபியா, குஜராத்துக்கு இரண்டு விமானங்களில் நிவாரணப் பொருட்களை அனுப்பி வைத்துள்ளது.
குஜராத் மாநிலத்தில் கடந்த 26 ம் தேதி ஏற்பட்ட பூகம்பத்தில், பலர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர். இதையடுத்து இந்தியா மட்டுமன்றி உலகநாடுகளிலிருந்து நிவாரணப் பொருட்கள் மற்றும் நிதியுதவிகள் குஜராத் நோக்கி வந்து குவிந்த வண்ணம் உள்ளன.
தற்போது குஜராத்துக்கு சவுதி அரேபியா, 2 விமானங்களில் நிவாரணப் பொருட்களை அனுப்பி வைத்துள்ளது. இந்த இரண்டு விமானங்களிலும் விரைவில்கெட்டுப் போகாத உணவுப் பொட்டலங்கள், கூடாரங்கள் அமைப்பதற்கான பொருட்கள், கம்பளிகள் ஆகியவை அனுப்பி வைத்துள்ளது.
டெல்லியிலுள்ள சவுதி அரேபிய தூதரக அறிக்கையில், சவுதி அரேபியாவிலிருந்து 5, 95,840 டாலர்கள் பெறுமானமுள்ள பொருட்கள் இந்தியாவந்துள்ளது. இவைகள் அகமதாபாத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என்று கூறப்பட்டுள்ளது.
ஐ.ஏ.என்.எஸ்.












Click it and Unblock the Notifications