அஸார் வழியில் ஜடேஜா ..
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
கிரிக்கெட் விளையாட 5 ஆண்டு தடை விதிக்கப்பட்டதை எதிர்த்து அஜய் ஜடேஜா நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
கிரிக்கெட் மேட்ச் பிக்ஸிங் தொடர்பாக அஸாருதீன், ஜடேஜா ஊள்பட சில வீரர்களுக்கு இந்திய கிரிக்கெட் வாரியம் தடை விதித்துள்ளது.
இதை எதிர்த்து ஏற்கனவே அஸாருதீன் வழக்குத் தொடர்ந்துள்ளார். இந்த நிலையில் ஜடேஜாவும் டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்
தனது 300 பக்க மனுவில் கிரிக்கெட் ஊழல் தொடர்பாக 5ஆண்டு தடை விதிக்கப்பட்டதை நீக்கக் கோரிய ஜடேஜா, அர்ஜூனா விருதை திரும்பஎடுத்துக்கொள்வது தொடர்பாக மத்திய அரசின் நோட்டீசை வாபஸ் வாங்கவும், கிரிக்கெட் ஊழல் தொடர்பான சி.பி.ஐ.ன் அறிக்கையைதிரும்பப்பெறவும் உத்தரவிடக் கோரியுள்ளார்.












Click it and Unblock the Notifications