மீண்டும் ஒரு புலி படு கொலை
ஹைதராபாத்:
ஆந்திராவில் உள்ள புலிகள் சரணாலயத்தில் பெண் புலி ஒன்று கொடூரமாக கொல்லப்பட்டுள்ளது.
ஹைதராபாத்திலிருந்து 250 கி.மீ தொலைவில் உள்ள நாகார்ஜூனசாகர்-ஸ்ரீசைலம் புலிகள் சரணாலயத்தில் புலியின் குரல்வளையை அறுத்து கொன்றதுடன் அதன்கால்களில் மூன்றை வெட்டி எடுத்துச்சென்றுள்ளனர்.
கடந்த அக்டோபர் மாதம்தான் இங்குள்ள ஒரு வயது புலிக்குட்டி ஒன்று தோலுரிக்கப்பட்டு இறந்து கிடந்தது. அச்சம்பவத்தில் சம்பந்தப்பட்டவர்கள்இன்னும் பிடிபடவில்லை. இதனிடையே, இச்சம்பவத்திற்காக அருகிலுள்ள கிராமத்தவர்களில் 20 பேர் வரை விசாரணைக்காக அழைத்துச்செல்லப்பட்டுள்ளதாக மாவட்ட வன அலுவலர் பி.கே.சிங் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
புலியை கொன்றவர்கள் புலியின் தோலை விட்டுச்சென்றிருப்பதால் அதனை உள்ளூர் மக்கள் அல்லது மற்றவர்கள்தான் கொன்றிருக்க வேண்டும். புலிவேட்டைக்காரர்களின் செயல் அல்ல இது என்று சரணாலயத்தின் இயக்குநர் எம்.பிரிதிவிராஜ் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், கடந்த வாரம்தான் ஒரு சிறுத்தை கொல்லப்பட்டு அதன் தோலுரிக்கப்பட்டு இருந்தது. 1993லிருந்து தற்போது வரை 39புலிகள் கொல்லப்பட்டுள்ளது என்றார்.
4500 ச.கி.மீ பரப்பளவில் 5 மாவட்டங்களில் பரவியுள்ள இச்சரணாலயத்தில் 400 பேர் கொண்ட சரணாலய பாதுகாப்புப்படையிருந்தும் வேட்டைக்காரர்களைபிடிக்க முடியவில்லை. இங்குள்ள சிறுத்தை, மான் போன்றவை அடிக்கடி கொல்லப்பட்டு அருகிலுள்ள கிராமங்களில் விற்கப்படுகின்றன.
ஐ.ஏ.என்.எஸ்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications