For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வளர்த்த மாடு முட்டி விவசாயி பலி

By Staff
Google Oneindia Tamil News

கேள்வி - பதில்

கே: சென்னையில் புதிய தமிழகம் கட்சி அலுவலகத்தில் நடந்த அராஜகம் பற்றி ...?

ப: வர, வர இந்த மாதிரி அராஜகங்கள் மலிந்து கொண்டிருக்கின்றன. இம்மாதிரி நிகழ்ச்சிகளில்சம்பந்தப்பட்டவர்கள் கடும் தண்டனைக்குள்ளாவது இல்லை - என்பது இதற்கு ஒரு முக்கிய காரணம்.

இந்த சம்பவமாவது, தீர விசாரிக்கப்பட்டு, குற்றவாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும்.

கே: அரசியல் எந்த திசையில் செல்ல வேண்டும் என்று அண்ணா விரும்பினாரோ, அந்த திசையில்தான்ம.தி.மு.க. செல்கிறது என்று வைகோ கூறியுள்ளது பற்றி ...?

ப: இலங்கைப் பக்கமாக, தென்திசையில் அரசியல் போக வேண்டும் - என்றா அண்ணாதுரை விரும்பினார் ...?

கே: வாழ்நாள் முழுவதும் உங்களைப் போல் இளமையாகவும், சுறுசுறுப்பாகவும் இருக்க என்ன வழி ...?

ப: மூளை வளர்ச்சி அடைந்து விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் - முதிர்ச்சி வராமல் தப்பித்துக் கொள்ளலாம்.

கே: போர் நிறுத்தம் கிடையாது என்று அதிபர் சந்திரிகா ஏன் பிடிவாதம் பிடிக்கிறார்? இது சரியா, தவறா?

ப: பேச்சு வார்த்தை முதலில் தொடங்க வேண்டும்: அதன் பிறகுதான் போர் நிறுத்தம் பற்றி முடிவு வர வேண்டும்:இல்லாவிட்டால், போர் நிறுத்த அறிவிப்பு வந்தவுடன், கிடைக்கிற அவகாசத்தில் புலிகள் தங்களை வலுப்படுத்திக்கொண்டு, அடுத்த தாக்குதலுக்கு தயாராவார்கள் - என்றுதான் சந்திரிகா கூறுகிறார்.

நான் ஆரம்பத்திலேயே கூறிய கருத்துதான் இது. அவருடைய நிலையில் நான் தவறு காணவில்லை.

கே: கருணாநிதி ஆட்சியில், உங்களுக்குப் பிடித்த உருப்படியான திட்டம் எது?

ப: உழவர் சந்தை அப்படிப்பட்டது என்றுதான் நான் நினைத்தேன். எங்கள் நிருபர், சென்ற 10.01.2001 துக்ளக்இதழில் எழுதிய கட்டுரை, சந்தேகங்களைக் கிளப்புகிறது. பார்க்க வேண்டும்.

கே: தியாகராஜர் ஆராதனை விழாவில் நீங்கள் இல. கணேசன் காதிலும், மூப்பனார் காதிலும் ஏதோரகசியம் சொன்னீர்களே - அது என்னங்க?

ப: ஞாபகமில்லை. ரயிலுக்கு நேரமாகிக் கொண்டிருக்கிறது என்று சொல்லியிருப்பேன் என்று நினைக்கிறேன்.

கே: பெண்களிடம் உள்ள பாராட்டத்தக்க அம்சம் என்று தாங்கள் எதைக் கூறுவீர்கள்...?

ப: ஆண்களை பெற்றெடுப்பது...

கே: மம்தா பானர்ஜி தாக்கப்பட்டது பற்றியும், மேற்கு வங்கத்தில் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்படவேண்டும் என்பது பற்றியும் தங்கள் கருத்து...?

ப: மேற்கு வங்கத்தில் சட்டம் - ஒழுங்கு நிலை சரியாக இல்லை என்பது கண்கூடு.

எதிர்க்கட்சிகளை மிரட்டியே தங்களை உயர்த்திக் கொள்வது -என்பது மார்க்சிஸ்ட்களின் வழி முறையாகவேஇருந்து வந்திருக்கிறது: மேற்கு வங்கத்தில், மம்தா கட்சியின் வளர்ச்சி, மார்க்சிஸ்ட்களின் இந்த போக்கைஇன்னமும் கடுமையாக்கியிருக்கிறது.

ஆனால், 17 பேர் ஒட்டு மொத்தமாக ஒரு குடிசையில் எரித்துக் கொல்லப்பட்டனர் - என்ற மம்தாவின்குற்றச்சாட்டிற்கு, இதுவரை எந்த ஆதாரமும் காணப்படவில்லை.

இது ஒருபுறமிருக்க, ஜனாதிபதி ஆட்சி பிரகடனத்திற்கு வேண்டிய பாராளுமன்ற பலம் பா.ஜ.க.வுக்கு இல்லை.காங்கிரஸோ, இரண்டும் கெட்டான் நிலையை எடுக்கிறது.

தேர்தல் மார்க்சிஸ்ட் ஆட்சியில் நடந்தால் - அது நியாயமாக நடக்காது என்ற அச்சம் இருப்பதால், பா.ஜ. அரசுதுணிந்து, மேற்குவங்க அரசை டிஸ்மிஸ் செய்தால் - 1 மாதத்திற்கு பாராளுமன்ற கூட்டம் இல்லை என்பதால்ஜனாதிபதி ஆட்சியை ஓட்டிச் செல்லலாம்.

நீதிமன்றங்கள் என்ன செய்யுமோ - சிக்கலான விஷயம்.

கே: கி.வீரமணி கூட்டிய மதச்சார்பற்ற கட்சிகளின் கூட்டத்தில், அ.தி.மு.க. சார்பாக யாரும் கலந்துகொள்ளாததற்கு, சோவின் ஆலோசனைதான் காரணம் - என்று ஒரு சில பத்திரிக்கைகளில் செய்திவந்துள்ளது பற்றி ...?

ப: அசல் கற்பனை. என்னிடம் எந்த ஆலோசனையும் கேட்க வேண்டிய அவசியம் ஜெயலலிதாவுக்கு இல்லை.

கே: வீரப்பனை கிரிமினலாக சிலர் முத்திரை குத்துகிறார்கள். ஆனால் இதுவரை எந்த நீதிமன்றமும்அவரை குற்றவாளி என்று தீர்ப்பளித்து, தண்டனை அளிக்கவில்லை -என்று பழ. நெடுமாறன் கூறியுள்ளது

பற்றி ...?

ப: சட்ட விரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்தின் கீழ், குற்றம் செய்தார்- என்று நெடுமாறனைப் பற்றி எந்தநீதிமன்றமும் தீர்ப்பு அளிக்கவில்லை. அதனால் அவர் அந்த குற்றத்தைச் செய்யவில்லை.- என்று ஆகி விடுமா?

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X