மீண்டும் நிலநடுக்கம்
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
பூகம்பத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட குஜராத் மாநிலம் கட்ச் மாவட்டத்தில் வியாழக்கிழமை நள்ளிரவும், வெள்ளிக்கிழமை அதிகாலையும்மீண்டும் நிலநடுக்கம் இருந்தது.
அகமதாபாத் நகர் மற்றும் பிற பகுதிகளில் வியாழக்கிழமை நள்ளிரவு 12.25 மணிக்கு திடீரென்று நிலநடுக்கம் ஏற்பட்டது. இதையடுத்து மக்கள்,தங்கள் வீடுகளிலிருந்து வெளியேறி ஓட ஆரம்பித்தனர். நள்ளிரவு உணரப்பட்ட நிலநடுக்கம் 5.3 என்ற ரிக்டர் அளவில் பதிவானது.
இதுகுறித்து டெல்லியிலுள்ள இந்திய பூகம்பவியல் துறை ஆராய்ச்சியாளர்கள் கூறுகையில், முதலில் நள்ளிரவு 12.25 க்கு நிலநடுக்கம் ஏற்பட்டது.இதையடுத்து 10 முறை நிலநடுக்கம் உணரப்பட்டது. இவைகள் 3.0 மற்றும் 4.0 என்ற ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளது என்றனர்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications