பெங்களூரில் ஜெ. சுவாமி தரிசனம்
Subscribe to Oneindia Tamil
பெங்களூர்:
தமிழகத்தில் தேர்தல் பரபரப்பு ஒரு பக்கம் இருக்கும் வேளையில் அ.தி.மு.க.பொதுச்செயலாளர் ஜெயலலிதா திடீரென சனிக்கிழமை பெங்களூர் வந்தார்.
பெங்களூர் வந்துள்ள ஜெயலலிதா ஞாயிற்றுக்கிழமை மைசூர் சாமுண்டேஸ்வரி கோயிலில் நடக்கும் விசேஷ பூஜையில் பங்கேற்கிறார்.
சமீபகாலங்களில் ஜெயலலிதாவும், அவரது தோழி சசிகலாவும் தமிழகத்தில் உள்ள முக்கிய கோவில்களுக்குச் சென்று பூஜைகள் செய்து வருகிறார்கள்.
இதற்கிடையே, ஜெயலலிதா சனிக்கிழமை மாலை 5 மணிக்கு சென்னையில் இருந்து ஜெட் விமானம் மூலம் பெங்களூர் வந்தார். பெங்களூரில் இருந்துமாலை 6 மணிக்கு கார் மூலம் மைசூர் சென்றார்.
பெங்களூர் வந்த ஜெயலலிதாவை கர்நாடக அ.தி.மு.க.வினர் வரவேற்றனர். ஜெயலலிதாவின் பெங்களூர் வருகை ரகசியமாக வைக்கப்பட்டிருந்தது. விமானநிலையத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.












Click it and Unblock the Notifications