சிலை திறப்பு விழாவில் மீனவர்கள் மோதல்
பாண்டிச்சேரி:
பாண்டிச்சேரியில் இரண்டு மீனவர் குழுக்களிடையே ஏற்பட்ட மோதல் காரணமாக பதற்ற நிலை ஏற்பட்டது.
கிருமாம்பாக்கம் என்ற இடத்திற்கு அருகே உள்ள மூர்த்திக்குப்பத்தில் இந்த மோதல் ஏற்பட்டது. சுதந்திரப்போராட்ட வீரர் சிங்காரவேலரின் நினைவு தினம் ஞாயிற்றுக்கிழமை அனுசரிக்கப்பட்டது. இதையடுத்து மூர்த்திக்குப்பம் பகுதியில் மீனவர் குழு ஒன்று சிலை வைக்க முயற்சி செய்தது.
சிலை திறப்பு விழாவின்போது தங்கள் தரப்பு பெயர்கள் எதுவும் சிலை பீடத்தில் இடம்பெறவில்லை என்று சிலமீனவர்கள் ஆட்சேபம் தெரிவித்தனர். இதையடுத்து இரு குழுக்களாக பிரிந்து மீனவர்கள் மோதலில் இறங்கினர்.இதில் சிலருக்கு காயம் ஏற்பட்டது.
காயமடைந்தவர்கள் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். ஒருவர் உயிருக்குப் போராடி வருகிறார்.
சம்பவத்தையடுத்து போலீஸார் அப்பகுதியில் குவிக்கப்பட்டனர். நிலைமை தற்போது கட்டுக்குள் இருப்பதாகதெரிவிக்கப்பட்டுள்ளது.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications