காஷ்மீர் சீக்கியர்களுக்கு உதவுவோம்...ஹூரியத்
ஸ்ரீநகர்:
காஷ்மீரில் வாழும் முஸ்லீம் சகோதரர்களோடு வாழ சீக்கியர்களுக்கு உரிமை உள்ளது என்றும் அவர்களுக்கு உதவ வேண்டும் என்றும் ஹூரியத்அமைப்பினர் திங்கள்கிழமை தெரிவித்தனர்.
திங்களன்று ஹூரியத் தலைவர்களுடன் சீக்கிய சிரோன்மனி அகாலிதளத்தின் (டோஹ்ரா பிரிவு) ஜி.எஸ்.டோஹ்ரா, அகில இந்திய சீக்கிய மாணவர் அமைப்பின்தலைவர் ஹர்மிந்தர் சிங் ஜில் உள்ளிட்டோர் பேச்சுவார்த்தை நடத்தினர்.
கூட்டத்திற்குப்பின் பேசிய ஹூரியத்தின் தலைவர்களுள் ஒருவரான ஷபீர் அகமது ஷா கூறுகையில், எங்களுடைய காஷ்மீர் போராட்டத்தில் சீக்கியர்கள்உதவவில்லையென்றாலும் அவர்களை வெளியே செல்ல அனுமதிக்க மாட்டோம். காஷ்மீரிலிருந்து இடம் பெயரும் முடிவை கைவிட காஷ்மீர் சீக்கியர்கள்முடிவு செய்துள்ளனர். முஸ்லீம் சகோதரர்களோடு இங்கு குடியிருக்க அவர்களுக்கு உரிமையுண்டு என்றார்.
மற்றொரு தலைவரான யாசின் மாலிக் கூறுகையில், சீக்கியர்கள் காஷ்மீரை விட்டு வெளியேறினால் சாகும் வரை உண்ணாவிரதம் இருப்பேன். என்உடலை தாண்டி வேண்டுமானால் அவர்கள் செல்லட்டும் என்றார்.
சீக்கியர்களின் உயிர் மற்றும் உடைமைகளின் பாதுகாப்பிற்கு உத்தரவாதம் தருவதாக கூறிய ஹூரியத் தலைவர்கள் கடந்த வாரம் கொல்லப்பட்டசீக்கியர்களுக்காக ஞாயிறன்று குருத்வாராவில் நடைபெற்ற மத சடங்குகளில் கலந்து கொண்டனர்.
இதில் கலந்து கொண்ட மத்திய பாதுகாப்பு அமைச்சர் ஜார்ஜ் பெர்ணான்டஸ், சீக்கியர்களுக்கு அளிக்க வேண்டிய பாதுகாப்பு குறித்து அரசு ஆராய்ந்து வருவதாக
தெரிவித்தார்.ஐ.ஏ.என்.எஸ்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications