சோகத்தை மறந்து காதல் கொண்டாட்டம்
மும்பை:
குஜராத்தை உலுக்கி பூகம்ப கோரத்தின் துயரத்தையும் மறந்து, மும்பையில், செவ்வாய்க்கிழமை காதலர் தினம் கொண்டாடப்பட்டது.
காதலர் தினம் கொண்டாடப்படும் இந்த நாளில், பத்திரிக்கை ஒன்றில் பூமி குலுங்கினாலும், மலை தடம் புரண்டாலும் நான் உன் மேல் கொண்ட காதல்தடம் புரளாது என்ற செய்தி வெளியாகியிருந்தது. இன்னொரு செய்தியில், நீ எனது வாழ்க்கை. நீ எனது இதயம். சாவு தவிர எதுவுமே நம்மைப் பிரிக்கமுடியாது என்று வெளியாகியிருந்தது.
சிவசேனைக் கட்சித் தொண்டர்கள் காதலர் தினத்தைக் கொண்டாடக் கூடாது என்று கடும் ஆர்ப்பாட்டம் நடத்திய போதும், எவ்வித பிரச்சனையுமின்றிமும்பையில் மிகவும் அமைதியாகக் கொண்டாடப்பட்டது காதலர் தினம்.
கல்லூரிகள், ஹோட்டல்கள், வாழ்த்து அட்டைகள் விற்கும் காலரிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. மும்பையில் வசிக்கும்காதலர்களிடையே சிவசேனைக் கட்சியினரின் மிரட்டல்கள் எவ்விதப் பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை. காதலர்கள் வழக்கம் போல் பரிசுப்பொருட்களும், வாழ்த்து அட்டைகளும் வாங்கி தங்கள் மனம் கவர்ந்தவர்களுக்குக் கொடுத்து மகிழ்ந்தார்கள்.
மும்பையில் ஜன நெருக்கடி மிகுந்த சாலையில் காதலர் தின வாழ்த்து அட்டைகள் விற்ற கடையில் தகராறு செய்து, சாலை மறியல் செய்ய முயன்றது தொடர்பாக30 சிவசேனா தொண்டர்களைப் போலீஸார் கைது செய்தனர். அவர்கள் பின்னர் விடுவிக்கப்பட்டனர். சினிமா தியேட்டர்களும், ஹோட்டல்களும்காதலர்களின் கூட்டத்தால் நிரம்பி வழிந்தன. சில ஹோட்டல்கள் புதிய வகை உணவுகளை அறிமுகப்படுத்தின.
சிவசேனைக் கட்சித் தலைவர் பால்தாக்கரே, காதலர் தினம் கொண்டாடுவது நமது கலாச்சாரம் அல்ல. அது வெளிநாட்டுப் பண்பாடு. அதனால் நாம்யாரும் காதலர் தினம் கொண்டாடக் கூடாது என்று தனது கட்சித் தொண்டர்களுக்கு அழைப்பு விடுத்திருந்தார். இதையடுத்து சிவசேனைக் கட்சித் தொண்டர்கள்காதலர் தினத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
யு.என்.ஐ.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications