காற்றுக்கென்ன வேலி? .. மெரீனாவில் திரையிட தடை

Subscribe to Oneindia Tamil

சென்னை:

சர்ச்சைக்குரிய காற்றுக்கென்ன வேலி திரைப்படத்தை, சென்னை மெரீனா கடற்கரையில் திரையிடுவதற்கு சென்னைகாவல்துறை அனுமதி மறுத்துள்ளது.

சண்டையில் காயமடைந்த பெண் விடுதலைப் புலிக்கும், அவருக்கு சிகிச்சை அளிக்கும் டாக்டருக்கும் இடையேஏற்படும் காதலைச் சித்தரிக்கும் படம் இது. புகழேந்தி என்பவர் இந்தப் படத்தை டைரக்ட் செய்துள்ளார்.

இந்தப் படத்தில் சர்ச்சைக்குரிய கருத்துக்கள் இருப்பதால் அதற்கு இன்னும் சென்சார் சான்றிதழ்அளிக்கப்படவில்லை. இதையடுத்து புகழேந்தி பல்வேறு போராட்டங்களை மேற்கொண்டார். இந்த நிலையில்படத்திற்கு விரைவில் சென்சார் சான்றிதழ் அளிக்காவிட்டால், சென்னை மெரீனா கடற்கரையில், 18-ம் தேதிஇலவசமாக இந்தப் படத்தைத் திரையிடுவோம் என இயக்குநர் பாரதிராஜா எச்சரிக்கை விடுத்திருந்தார்.

இந்த நிலையில், சென்சார் சான்றிதழ் வாங்காத ஒரு படத்தை திரையிடுவதற்கு அனுமதிக்க மாட்டோம் எனசென்னை காவல்துறை தெரிவித்துள்ளது. சான்றிதழ் பெறாத படத்தைத் திரையிடுவது சட்டவிரோதமானு. இதுசட்டம், ஒழுங்கு சம்பந்தப்பட்ட பிரச்சினை என்பதால் படத்தை கடற்கரையில் திரையடுவதற்கு அனுமதி தரமுடியாது என காவல்துறை செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.

யு.என்.ஐ.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+