கடல் கடந்த மகா சிவராத்திரி

Subscribe to Oneindia Tamil

ஜோகன்னஸ்பர்க்:

சிவராத்திரியை முன்னிட்டு தென்னாப்பிரிக்காவில் வரும் ஞாயிறன்று மகா சிவராத்திரி யாத்திரை நடைபெற உள்ளது.

கடந்த 10 ஆண்டுகளாக நடைபெற்று வரும் இந்த யாத்திரை ஆரம்பத்தில் சிறிய அளவிலேயே தொடங்கியது. தற்போது 5000 பேர் வரை கலந்துகொள்ளும் பெரிய விழாவாக மாறி விட்டது.

ஹிந்துக்கள் அதிகம் வசிக்கும் தென்னாப்பிரிக்காவின் லெனேஸியா பகுதியில், 8 கி.மீ. தூரம் செல்லும் யாத்திரை குழுவினருக்கான பயணத் திட்டத்தைசிறப்பான முறையில் அமைத்துள்ளனர்.

யாத்திரை செல்லும் பாதையில் உள்ள அனைத்து ஹிந்து கோவில்களுக்கும் யாத்திரைக் குழு செல்லும். இந்த விழா தற்போது ஒரு முக்கிய ஹிந்துவிழாவாக கொண்டாடப்படுகிறது. விழாவின் தொடக்கத்தில் பிரார்த்தனை நடைபெறும். பின்னர் நடைபெறும் யாத்திரையில் வெள்ளையாடை பக்தர்கள்பங்கு கொள்வர்.

யாத்திரையின் போது தேவைப்படுவோருக்கு பஸ் வசதி அளிக்கப்படும். முன்னெச்சரிக்கையாக யாத்திரையின் போது, தீயணைப்பு வண்டி மற்றும் ஆம்புலன்ஸ்ஆகியவை உடன் வரும். போலீஸ் மற்றும் உள்ளூர் நிர்வாகம் ஆகியோரின் ஒத்துழைப்புடன் இந்த யாத்திரை நடைபெறும். இவ்வாண்டு யாத்திரை சுவாமிசங்கரானந்தாவின் நினைவாக கொண்டாடப்படும்.

ஸ்ரீ அதிசம்ஹார ஆஸ்ரமத்தை நிறுவிய சுவாமி சங்கரானந்த மகாராஜ் தான் இந்த யாத்திரை திரு விழாவை ஆரம்பித்து வைத்தவர். இத்தகவல்களை ஹிந்துஒருங்கிணைப்புக் குழுவின் தலைவரான கோக்கி சிங் தெரிவிக்கிறார்.

லெளடியம் பகுதியிலும் இது போன்ற ஒரு யாத்திரை ஆண்டுதோறும் அப்பகுதியில் உள்ள ஹிந்து கோவில்களுக்கு சென்றுவரும் என்று இப்பகுதி நிகழ்ச்சிஒருங்கிணைப்பாளர் ஸ்ரீசந்திர லஷ்மண் தெரிவித்தார்.

ஐ.ஏ.என்.எஸ்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+