3 சிறுமிகள் சுட்டுக்கொலை

Subscribe to Oneindia Tamil

லாகூர்:

பாகிஸ்தான் லாகூரில் மூன்றாவதும் பெண் குழந்தையாகப் பிறந்து விட்டதால் கோபமடைந்த நபர், புதிதாகப் பிறந்தபச்சிளங் குழந்தை உள்பட தனது 3 மகள்களையும் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றார்.

லாகூரில் வசித்து வருபவர் பெர்மைஷ் அலி. இவருக்கு கடந்த 20 நாட்களுக்கு முன் பெண் குழந்தை பிறந்தது. இதுஇவரது மூன்றாவது குழந்தையாகும். தனக்கு 3 குழந்தைகளுமே பெண்ணாகப் பிறந்து விட்டதே என்று வருந்தியஇவர் மூன்று பேரையும் கொலை செய்து விடுவது என்று திட்டமிட்டார்.

இதன்படி செவ்வாய்க்கிழமை இரவு இவரது குழந்தைகள் மேக்விஷ் (3), சைரிஷ் (2), அலியா, ( பிறந்து 20நாட்களே ஆகிறது) ஆகியோரைத் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றார்.

குழந்தைகள் மூன்று பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். தனது குழந்தைகளைக் கொலை செய்வதற்குமுன்னதாக அவர் தனது மனைவி கவுசருக்கு தூக்க மாத்திரைகளைக் கொடுத்து தூங்க வைத்தார்.

இதுகுறித்து இவரது மனைவி கவுசர் போலீஸாரிடம் கொடுத்த வாக்குமூலத்தில், எனக்குப் பிறந்த 3 குழந்தைகளுமேபெண்ணாகப் பிறந்து விட்டதால் எனது கணவர் மிகவும் வருந்தினார். அவர் தனக்கு ஒரு ஆண் குழந்தை பிறக்கவேண்டும் என்று விரும்பினார். ஆனால் 3 வதும் பெண் குழந்தையாகப் பிறந்து விட்டதால் என் கணவர் மிகவும்கோபமடைந்தார்.

செவ்வாய்க்கிழமை, நான் அவரிடம் குழந்தைகளுக்குப் பால் வாங்கிக் கொடுக்கும்படிக் கேட்டேன். ஆனால் அவர்,பால் ஒன்றும் வாங்கித்தர முடியாது. குழந்தைகள் இறந்து போகட்டும் என்ற ரீதியில் பேசினார். பின்னர் இரவுஎனக்கு தூக்க மாத்திரைகளைக் கொடுத்து விட்டு, என் குழந்தைகள் 3 பேரையும் கொலை செய்து விட்டார் என்றார்.

இதற்கிடையே கவுசரும், பெர்மைஷ் அலியும் காதலித்து, பெற்றோர்களை எதிர்த்து திருமணம் செய்துகொண்டவர்கள் என்று தெரிய வந்துள்ளது. போலீஸார் இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரித்துவருகின்றனர்.

ஐ.ஏ.என்.எஸ்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+