குழந்தைகளைக் கொன்று தாய் தற்கொலை
Subscribe to Oneindia Tamil
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் மாவட்டம் மாமல்லபுரத்தில் 25 வயதுள்ள பெண் தனது இரண்டு குழந்தைகளையும் கொலை செய்து விட்டுத் தானும் தற்கொலை செய்துகொண்டார்.
தற்கொலை செய்து கொண்ட பெண்ணின் பெயர் சுந்தரி (25). இவருக்குத் திருமணமாகி 5 வருடங்கள் ஆகின்றன. இவரது கணவர் தினமும் குடித்து விட்டு வந்துசுந்தரியையும், 4 மற்றும் 3 வயதான இரண்டு குழந்தைகளையும் அடித்து துன்புறுத்துவாராம்.
இதையடுத்து, கணவனால் தினம், தினம் கொடுமைப்படுத்தப்படுவதை விட சாவதே மேல் என்று நினைத்து தனது இரண்டு குழந்தைகள் மேலும்மண்ணெண்ணெய் ஊற்றித் தீ வைத்து விட்டுத் தானும் தற்கொலை செய்து கொண்டார் என்று கூறப்படுகிறது.
மாமல்லபுரம் போலீஸார் இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications