ஐ.டி.யால் ஆபத்தில்லை .. மத்திய அமைச்சர்
கோவை:
வேகமாக வளர்ச்சியுறும் புதிய தொழிலான தகவல் தொழில் நுட்பத்தால், மற்ற தொழில்களுக்கு எவ்வித பாதிப்பும்ஏற்படாது என கோவையில் மத்திய தகவல் தொழில் நுட்பத் துறை அமைச்சர் பிரமோத் மாகஜன் நிருபர்களுக்குஅளித்த பேட்டியில் தெரிவித்தார்.
கோவையில் சுதேசி ஜனக்ரன் மஞ்ச், தேசிய மார்க்கெட்டிங் கமிட்டி ஆகியவை இணைந்து சுதேசிப் பொருட்கள்கண்காட்சியை நடத்துகிறது. இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ள மத்திய தகவல் தொழில்நுட்பம் மற்றும்நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரமோத் மகாஜன் கோவை வந்தார். கோவையில் அவர் நிருபர்களுக்குஅளித்த பேட்டியில் கூறியதாவது:
புதிய பொருளாதார வளர்ச்சியில் தகவல் தொழில் நுட்பம் இடம் பிடித்துள்ளது. இது ஒன்றும் புதிய மாற்றம் அல்ல.டெக்ஸ்டைல், இன்ஜினியரிங் போன்ற இதர தொழில்களுக்கு தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியால் எவ்விதபாதிப்பும் ஏற்படாது.
மாறாக பிற தொழில்கள் உதவ தகவல் தொழில்நுட்பம் ஒரு முன்னோடியாகத் தான் இருக்கும். தகவல்தொழில்நுட்பத்திற்கு பின்னால், பிற தொழில்கள் அணி வகுக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.
தகவல் தொழில்நுட்பம் என்பது புதிதாக, நவீனமயமான ஒரு சொல்லாகவும், புதிய தொழிலாகவும் திகழ்கிறது.இந்த புதிய தொழில் வளர்ச்சிக்காக மற்ற தொழில்கள் புறக்கணிக்கப்படுகின்றன என்பது தவறான முன்னுதாரணம்.
தகவல் தொழில் நுட்பத்தில் சாஃப்ட்வேர் ஏற்றுமதிக்கு சிறப்பு சலுகை எதையும் அரசு கொடுத்து விடவில்லை. மற்றதொழில்களுக்கு உள்ள ஏற்றுமதி சலுகைகளே இந்த சாஃப்ட்வேருக்கும் உண்டு. இந்த தகவல் தொழில் நுட்பம்சுதேசிப் பொருளேயன்றி அந்நியநாட்டில் இருந்து வந்து விடவில்லை.
இன்றைக்கு உலகம் முழுவதிலும், இந்தியர்கள் வாழ்கின்றனர். சர்வதேச அரங்கில் இந்தியாவின் புகழ்பரவியுள்ளது. இதற்கு தகவல் தொழில்நுட்பம் ஒரு காரணமாகும். இந்தியாவிலிருந்து அதிக அளவில்வெளிநாடுகளுக்கு இப்போது மக்கள் சென்று வருகின்றனர்.
இவர்கள் வெளிநாட்டில் சம்பாதித்ததை இந்தியாவில் முதலீடு செய்யவே விரும்புகின்றனர். சிலிகான் பள்ளத்தாக்குஎனப்படும் அமெரிக்காவின் கம்ப்யூட்டர் நகரில் இந்தியர்கள் தான் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். இங்குதற்போது "பிரெய்ன் டெரய்ன் இல்லை. 1970ம் ஆண்டுகளில் இங்கிருந்த "அறிவுப் பஞ்சம் இந்தியர்களால்தீர்க்கப்பட்டு விட்டது. இது இப்போது இந்தியாவில் உருவாகிக் கொண்டுள்ளது. எனவே இதனை சமாளிக்க உரியநடவடிக்கைகளை இந்திய அரசு மேற்கொண்டு வருகிறது.
இந்தியாவில் சாஃப்ட்வேர் தொழில் நுட்பத்தில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறோம். ஆனால், ஹார்டுவேர்எனப்படும் கம்ப்யூட்டரை உருவாக்கும் பயிற்சியிலும், கம்ப்யூட்டர் தயாரிப்பிலும் நாம் முயற்சிமேற்கொள்ளவில்லை. இதற்கு காரணம், கம்ப்யூட்டரை உருவாக்குவது என்பது மிகுந்த செலவு மிக்க ஒன்றாகும்.ஆனால், சாஃப்ட்வேர் அறிவு சார்ந்த ஒன்றாகும்.
போலியான சாஃப்ட்வேர்கள் பயன்படுத்துவது குறித்து இதுவரை அரசுக்குப் புகார் எதுவும் வரவில்லை. இத்தகையபுகார் வந்தால், அதனை போலீசார் கவனிப்பர். புற்றீசல் போல் நமது நாட்டில் உருவாகியுள்ள கம்ப்யூட்டர்நிறுவனங்களை நெறிறைப்படுத்த வேண்டிய அவசியம் நமக்கு இல்லை. மாறாக, இன்டர்நெட்டில் "ஆன்லைன்தேர்வை நடத்திச் சான்றிதழ் வழங்குவது உபயோகமாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.
குஜராத்தில் நடந்த மோசமான பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் புத்துணர்வு பெற இன்னும் இரண்டுஆண்டுகளாகும். இவர்களுக்கு 5 லட்சம் வீடுகள் கட்டிக் கொடுக்கவும், வேலை வாய்ப்பு அளிக்கவும் அரசுதீர்மானித்துள்ளது.
பார்லிமென்டில் காங்கிரஸ் கட்சி பிரச்னையைக் கிளப்ப போவதாக சோனியா காந்தி தெரிவித்துள்ளார். அவர்பார்லிமென்டில் பேசட்டும் அதற்குப் பிறகு பார்க்கலாம்.
வரும் பட்ஜெட் கூட்டத் தொடரில் மகளிர் மசோதா, வேளாண்மைப் பயிர் வகைகள் மேம்பாட்டு மசோதா, லஞ்சஒழிப்பு மசோதா ஆகியவை உள்பட பல மசோதாக்கள் தாக்கல் செய்யப்படும் என்றார் பிரமோத் மகாஜன்.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications